என்னடா ராஜமவுலிக்கு படத்திற்கு வந்த சோதனை! பாகுபலி ஒரு திருட்டு கதையா?

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2015 மற்றும் 2017 இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படம் ஒரு திருட்டு கதை என்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது.…

paa

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2015 மற்றும் 2017 இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படம் ஒரு திருட்டு கதை என்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. பாகுபலி திரைப்படம் வெளியானது முதல் இது லோட் ஆப் தி ரிங்ஸ், 300 பருத்தி வீரர்கள் போன்ற ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து சுட்ட காட்சிகள் என்று நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் சிலர் படத்தின் கதையை திருட்டு கதை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாகுபலி திரைப்படமும் , தி லயன் கிங் கதையும் ஒன்று தானா என வாங்க பார்க்கலாம்…

மகிழ்மதியின் ராஜாவான அமரேந்திர பாகுபலியை சூழ்ச்சி செய்து பல்வாள்தேவன் கொண்டுவிடுவான்.
அதற்குப் பிறகு மகேந்திர பாகுபலி அவந்திகாவை பின் தொடர்ந்து கதைக்குள் வந்து ராஜ்யத்தை மீட்டெடுப்பார். அதுவரை மகேந்திர பாகுபலியை சங்கா மற்றும் துரை மகேந்திர பாகுபலியை வளர்ப்பார்கள்.

அதே போலத்தான் தி லயன் கிங் படத்திலும் முஃபாஸாவை ஸ்கார் கொன்று அரசனாக மாறி விடுவார். அதன் பின் சிம்பா நாலா உதவியுடன் கதைக்குள் வந்து தன் பெரியப்பா ஸ்கார்யை பழிவாங்கி ராஜ்யத்தை மீட்டெடுப்பார். அதுவரை சிம்பாவை டிமான், பூம்பா வளர்ப்பார்கள்.

இந்த இரண்டு கதையிலும் கதை நாயகனான முஃபாஸா மற்றும் அமரேந்திர பாகுபலியும் வில்லனான ஸ்கார் மற்றும் பல்வாள்தேவன் அண்ணன் தம்பிகள் தான். அதே போல வில்லனான இருவர் முகத்திலும் ஒரு தழும்பு இருக்கும். மேலும் இந்த இரண்டு கதையிலும் அப்பாவும் மன்னனும் ஒரே உருவ தோற்றத்தில் இருப்பார்கள்.

அடுத்ததாக இரண்டு படத்திலும் ஹீரோக்கள் தான் ராஜ்யத்திற்கு திரும்பி செல்ல காரணம் ஹீரோயின்கள் தான். அப்பா ஹீரோவின் இறப்பிற்கு காரணம் சகோதரன் தான்.

தி லயன் கிங் படத்தில் முஃபாஸா சிம்பாவை அந்த அடர்ந்த மயான பூமிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிப்பார்கள், ஆனால் சிம்பா அதை மீறி போவது போல காட்சிகள் இருக்கும். அதே போல பாகுபலி படத்திலும் மகேந்திர பாகுபலியை வளர்ப்பு தாயான சங்கா மலை ஏற கூடாது அங்கு பேய் பூதங்கள் இருக்கும் என எச்சரிப்பார்கள். ஆனால் அதை மீறி மகேந்திர பாகுபலி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த இரண்டு படத்திலும் ஹீரோக்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை எளியதாக ஒப்பிட முடியும். பாகுபலி எதை செய்தாலும் யோசித்து தான் செயல்படுவார். அதை குறிக்கும் விதமாக படத்தில் ஒரு காட்சி இருக்கும். போருக்கு முன் காளி தேவிக்கு பல்வாள் தேவன் காலி தேவிக்கு மிருக பலி கொடுப்பார்.

ஆனால் பாகுபலி அது தவறுன்னு சுட்டி காட்டி தனது கையை அறுத்து ரத்தத்தை பலி கொடுப்பர். லயன் கிங் படத்தில் முஃபாஸா திட்டமிட்டபடித்தான் வேட்டையாடுவார். ஆனால் ஸ்கார் தோணும் போது எல்லாம் வேட்டையாடி இடத்தை அளித்து வருவார்.

லயன் கிங் படத்தின் ஹேய்னா கூட்டமும் பாகுபலி படத்தின் காலகேயர் கூட்டமும் ஒன்று தான். இந்த இரு கூட்டமும் எந்த நாட்டை கடந்து சென்றாலும் அந்த நாடே அழிந்ததாக கூறப்படுகிறது. முஃபாஸா இறப்பிற்கு பிறகு சீமாவின் அம்மா ஸ்கார் இடம் அடிமையாக இருப்பார்கள்.

அதே போல பாகுபலி இறந்த பின் தேவசேனாவை பல்வாள்தேவன் அடிமையாக வைத்திருப்பார். இந்த இரண்டு கதையிலும் வில்லனுக்கு மகாராணி மீது ஒரு மோகம் இருக்கும். அதன் பின் கிளைமேக்சில் இரண்டு குட்டி ஹீரோவும் அவர்கள் பெரியப்பாவிடம் சண்டை போட்டு அவர்கள் ராஜ்யத்தை மீட்டெடுப்பார்கள்.

பாகுபலி படத்தில் வரும் கதையும் திருட்டு தான் அதில் வரும் காட்சிகளும் திருட்டு தான் என சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது நாம் அனைவருக்கும் தெரியும். காப்பி கதையாக இருந்தாலும் பாகுபலியை பிரம்மாண்டமாக எடுத்ததிற்கு ராராஜமவுலிக்கு வாழ்த்துக்கள் தான் கூறவேண்டும் என ரசிகர்கள் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.