தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த பூர்ணிமா ஜெயராம், கே.பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் 28 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் தான் மீண்டும் அம்மா வேடங்களில் ரீஎண்ட்ரி ஆனார்.
நடிகை பூர்ணிமா ஜெயராம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழகத்தில்தான் பெரும்பாலும் வளர்ந்தார். ஒரு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 1981ஆம் ஆண்டு ‘நெஞ்சில் ஒரு முள்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று கொடுத்தது ‘கிளிஞ்சல்கள்’ என்ற திரைப்படம் தான். மோகன் நடிப்பில் துரை இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு மீண்டும் அவர் மோகன் நடித்த ‘பயணங்கள் முடியவில்லை’ என்ற திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு பல திரையரங்குகளில் ஓடியது என்பது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில்தான் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிக்கும்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கிசு கிசுக்கள் எழுந்தது.
தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!
இதனை அடுத்து அவர் நன்றி மீண்டும் வருக, கண் சிவந்தால் மண் சிவக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் 1984ஆம் ஆண்டு ‘விதி’ மற்றும் ‘நீங்கள் கேட்டவை’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். அப்போது அவர் புகழில் உச்சத்தில் இருந்த நிலையில் ஏராளமான படங்கள் அவருக்கு குவிந்த நிலையில் தான் அவர் திடீரென கே.பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் அவர் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த பிரபுவின் அடுத்தாத்து ஆல்பர்ட் என்ற திரைப்படத்தில் மட்டும் தான் நடித்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் திரையுலகில் அவர் நடிக்கவில்லை.
இந்த நிலையில் 28 ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்ற திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு ஜில்லா திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு வாய்மை உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான ருத்ரன் மற்றும் தீர்க்கதரிசி ஆகிய படங்களில்கூட பூர்ணிமா ஜெயராம் நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் ஒரு வெற்றிகரமான நடிகை திருமணம் செய்து கொண்டதால் பல பட வாய்ப்புகளை தவிர்த்த நிலையில் அவர் புகழின் உச்சத்திற்கு செல்ல வேண்டியதை இழந்தார் என்று தான் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவர் தனக்கு ஒரு அன்பான கணவன் மற்றும் இரண்டு குழந்தைகள் என்ற குடும்பத்தில் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் சினிமாவில் ஏற்பட்ட இழப்பு எனக்கு பெரிதாக தெரியவில்லை என்றும் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
திருமணத்திற்கு பின்னர் பூர்ணிமா ஜெயராம் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களை தயாரித்தார். பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ‘ஆராரோ ஆரிராரோ’, ‘அம்மா வந்தாச்சு’, ‘சுந்தரகாண்டம்’, ‘வேட்டிய மடிச்சு கட்டு’ போன்ற படங்களை தயாரித்தார்.