நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படத்தை இயக்கியவர் என்ற பெருமையும் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனை பெற்ற பெருமையும் உண்டு என்றால் அது நடிகை விஜய நிர்மலாவுக்குதான்.
நடிகை விஜய நிர்மலா கடந்த 1946ஆம் ஆண்டு பிறந்தார். அவர் சிறு வயதிலேயே கலைகள் மீது ஆர்வமாக இருந்தவர் என்பதால் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், சினிமாவில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
தமிழில் ஐந்தே படங்கள்.. குடும்பத்தோடு விமான விபத்தில் இறந்த பிரபல நடிகை..
1964 ஆம் ஆண்டு தனது 18வது வயதில் மலையாள திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் 1965ஆம் ஆண்டு ’எங்க வீட்டுப் பெண்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மிகப் பெரிய புகழை பெற்று தந்தது.
இதனை அடுத்து அவர் தமிழில் சித்தி, பந்தயம், நீலகிரி எக்ஸ்பிரஸ், பணமா பாசமா போன்ற திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக ’நீலகிரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக அபாரமாக நடித்திருப்பார். அதேபோல் பணமா பாசமா என்ற திரைப்படத்தில் நீண்ட வசனங்களையும் அசால்டாக பேசியிருப்பார்.
அதன் பிறகு ’சோப்பு சீப்பு கண்ணாடி’ என்ற காமெடி படத்தில் நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த அன்பளிப்பு என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த விஜய நிர்மலா ’என் அண்ணன்’ திரைப்படத்தில் எம்ஜிஆர் தங்கையாக நடித்தார்.
12 வயதில் நடிப்பு.. கல்லூரி தாளாளருடன் திருமணம்.. ஒய் விஜயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள்..!
இந்த நிலையில்தான் அவர் 1973ஆம் ஆண்டு மீனா என்ற நாவலை அதே பெயரில் இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்து அவர் பல படங்களை மலையாளம், தெலுங்கு மொழிகளில் இயக்கினார். அவரது இயக்கத்தில் உருவான கவிதா, தேவதாஸ், ராம் ராபர்ட் ரஹீம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன.
இந்த நிலையில் தான் சிவாஜி கணேசன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்த ’பெஜ்வாடா பெபுலி’ என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
200க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். 44 படங்களை இயக்கிய ராணி சந்திராவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. உலகிலேயே அதிக படங்கள் இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் அவர் இடம் பெற்றார். அதுமட்டுமின்றி அவர் ஆந்திர மாநில விருதுகளையும் வென்று உள்ளார்.
நடிகை விஜய நிர்மலா, கிருஷ்ணமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நரேஷ் என்ற மகன் உண்டு. நரேஷ் தெலுங்கு நடிகராக உள்ளார். கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்தவுடன் அவர் நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!
நடிகை விஜய நிர்மலா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 73வது வயதில் காலமானார். மிகச்சிறப்பான நடிப்பு, அருமையான இயக்கம் என திரை உலகில் மிகப்பெரிய சாதனை செய்த விஜய் நிர்மலாவின் திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.