தமிழில் ஐந்தே படங்கள்.. குடும்பத்தோடு விமான விபத்தில் இறந்த பிரபல நடிகை..

தமிழில் ஐந்து படங்கள் மட்டும் நடித்து, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருந்த நடிகை ஒருவர் விமான விபத்தில் குடும்பத்துடன் பலியான சம்பவம் கடந்த 1976ஆம் ஆண்டு நடந்து ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சிவகுமார் நடித்த பத்ரகாளி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ராணி சந்திரா. இந்த படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் விமான விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 வயதில் நடிப்பு.. கல்லூரி தாளாளருடன் திருமணம்.. ஒய் விஜயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள்..!

rani chandra3

கேரளாவை சேர்ந்த ராணி சந்திரா சிறு வயதிலேயே நடனம், நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்ததால் அவரை அவரது பெற்றோர் அனைத்து கலைகளிலும் வல்லவராக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து அவர் பள்ளி நாடக நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கடந்த 1965ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட அவருக்கு மிஸ் கேரளா என்ற பட்டமும் கிடைத்தது. இதனை அடுத்து அவர் கேரளா முழுவதும் பிரபலமான நிலையில் தான் சினிமாவில் அறிமுகமானார்.

18 வயதில் முதன் முதலாக ’பாவப்பட்டவள்’ என்ற மலையாள படத்தில் நடித்த அவர் அதன் பிறகு பிரேம் நசீர் உட்பட பல மலையாள பிரபல நடிகர்களுடன் நடித்தார். இந்த நிலையில் தான் 1969ஆம் ஆண்டு தமிழில் ’பொற்சிலை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர்  அவர் ’ராதா’, ’தேன் சிந்துதே வானம்’, ‘சுவாமி ஐயப்பன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

rani chandra2

இந்த நிலையில்  ராணி சந்திரா அவரது ஐந்தாவது தமிழ் படமான பத்ரகாளி என்ற படத்தில் சிவகுமார் ஜோடியாக அவர் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் கலை நிகழ்ச்சிக்காக துபாய் மற்றும் அமெரிக்கா சென்ற நிலையில் சில நாட்கள் கழித்து நாடு திரும்பினார்.

தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!

இதனை அடுத்து அவர் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வர வேண்டிய நிலையில் திடீரென மும்பையில் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்த மாற்று விமானத்தில் ராணி சந்திரா, அவரது தாயார், சகோதரிகள், கலைக்குழுவினர் ஆகியோர் சென்றனர்.

அந்த விமானம் தான் நடுவழியில் பெட்ரோல் டேங்க் வெடித்து  தீப்பிடித்ததால் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்பது மட்டுமின்றி உடல்கள் அனைத்தும் தீக்கிரையானதால் உடல்களை அடையாளம் கூட காண முடியாத நிலை ஏற்பட்டது.

rani chandra1

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த ராணி சந்திரா உறவினர்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பெரும் கஷ்டத்திற்கு பிறகு ராணி சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்களை கண்டுபிடித்து இறுதி சடங்கு செய்தனர்.

பத்ரகாளி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே ராணி சந்திரா இறந்துவிட்டதால் அவரது கேரக்டருக்கு அவரைப் போலவே இருந்த புஷ்பா என்பவரை வைத்து மீதி படத்தை முடித்தனர். இந்த படம் 1976ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

முதல் ஒரு வாரம் காத்தாடிய தியேட்டர்.. அதன்பின் 200 நாள் ஓடி சாதனை.. பயணங்கள் முடிவதில்லை படத்தின் வெற்றிக்கதை..!

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து கேரளா அரசின் மாநில விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் ராணி சந்திரா. இவர் தமிழ், மலையாள திரையுலகில் மிகப்பெரிய சாதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விமான விபத்தில் இறந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...