பாற்கடலைக் கடந்து அமுதத்தை எடுக்க வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் எண்ணினர். அதன்படி அவர்கள் கடையும்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதைக் கண்டு அஞ்சியவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது அவர்களுக்காக விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த நாள் தான் சனிக்கிழமை.
நஞ்சை உண்டு இறைவன் தேவர்களைக் காப்பாற்றி அருளிய நாள் சனிக்கிழமை என்பதால் சனி பிரதோஷம் மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
இறைவன், இறைவி, வாகனம் ஆகிய மூவருக்கும் அன்றைய தினம் பூஜை இந்த இனிய நாளில் விரதம் கடைபிடித்து வழிபாடு செய்ய மூவரது ஆசிகளும் நமக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும்.
சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. அதாவது சனிக்கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்து கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் தரிசித்து வந்தால் நமக்கு சகல நன்மைகளும் கிட்டும். பாவங்கள் விலகும் என்று பொருள்.
சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும்.
சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும்.மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவாலயத்திற்குச் சென்று வழிபட்ட பலனை பெற்று விடலாம். ஒரு சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 5 ஆண்டுகள் சிவாலயத்தில் தரிசித்த பலனை பெற்று விடலாம் என்பார்கள்.
திங்கள் கிழமையில் வருவது சோமவார பிரதோஷம். சனிக்கிழமையில் வருவது சனி மகா பிரதோஷம். இதே போன்று ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனி பலன்கள் உண்டு.
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். வறுமை விலகும். நோய்கள் நீங்கும். சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சனி மகாபிரதோஷம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இன்றைய தினம் 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.
நந்தி பகவான்
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது.
எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர்.
சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும். நினைவாற்றல் பெருகும். தோஷங்கள் நீங்குகிறது.