வகை வகையான வளையல்கள்… உங்ககிட்ட இவற்றில் எந்த வளையல்கள் உள்ளது??

By Sowmiya

Published:

அணிகலன்களின் தனித்துவம் வாய்ந்தது இந்த வளையல்கள். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பண்டைய காலத்தில் இருந்தே பெண்கள் வளையல் அணியும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அந்த வளையல்களிலும் அதில் உள்ள வேலைபாடுகளிலும் புதுமைகள் பல புகுத்தப்பட்டு விட்டன.

ஆடைக்கு ஏற்றார் போல் அதாவது மாடன் உடைகள் மற்றும் பாரம்பரிய உடைகளுக்கு தகுந்தார் போல பல வகையான வளையல்கள் உள்ளன. அவற்றில் சில வகைகளை நாம் பார்ப்போம்.

கண்ணாடி வளையல்:

istockphoto 1211807550 612x612 1

கண்ணாடி வளையல் பிடிக்காத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கக் கூடியது இந்த கண்ணாடி வளையல். அனைத்து தரப்பினரும் எளிதில் வாங்கி அணிந்து மகிழ கூடிய வகையில் இந்த கண்ணாடி வளையல் உள்ளது. உடையின் நிறத்திற்கு தகுந்தார் போல் விதவிதமாக எளிதில் வாங்கி அணிய வசதியானது. கண்ணாடி வளையலின் ஒலி வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு மிகவும் நல்லது என்று தான் நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு என்னும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

மெட்டல் வளையல்:

images 4 9

கண்ணாடி வளையல் அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் எளிதில் உடைய கூடிய தன்மை உடையது. இந்த மெட்டல் வளையல் கண்ணாடி வளையலுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடியது. மெட்டலினால் ஆன இந்த வளையல் ஆனது எளிதில் உடையாது கண்ணாடி வளையல் போலவே இதுவும் பல நிறங்களில் கிடைக்கிறது. சல்வார், புடவை என அனைத்து உடைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கும்.

நூல் வளையல்:

images 4 8 1

சந்தைக்கு வந்த குறைந்த காலத்தில் வந்து அனைவருக்கும் பிடித்தமானதாய் மிகவும் பிரபலமானதாய் உள்ள வளையல் தான் இந்த நூல் வளையல். பார்ப்பதற்கு அழகாகவும் அதே சமயம் அணிந்து கொள்ள வசதியாகவும் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக நூல் வளையலை தேர்வு செய்யலாம். பட்டுப் புடவைகள் அணியும் பொழுது புடவையின் நிறத்திற்கு ஏற்ப இந்த நூலினால் செய்யப்பட்ட வளையலையும் சேர்த்து அணிந்தால் கூடுதல் அழகு கிடைக்கும்.

திருகு வளையல்:

istockphoto 1461234437 612x612 1 1

வட இந்தியாவில் பிரபலமாகி இப்பொழுது தமிழகத்திலும் பெண்கள் அதிகம் அணிந்து கொள்ளக்கூடிய ஒரு வளையல் தான் திருகு வளையல். கனமான வேலைப்பாடுகளுடன் அழகாக தனித்துவமிக்க வடிவமைப்புடன் இந்த திருகு வளையல்கள் உள்ளன. முக்கிய நிகழ்வுக்கு அணிந்து கொள்ள மிகவும் ஏற்ற வளையல்.

கஃப் வளையல்:

istockphoto 851789296 612x612 1

கப் வளையல் ஆனது திருகு போலவும் இல்லாமல் கைகளில் நேரடியாக மாட்டிக் கொள்வது போன்ற வடிவமைப்பில் இருக்கும். இந்திய பாரம்பரிய ஆடை அல்லது மேற்கத்திய ஆடை என இரண்டிற்கும் ஏற்றது போல் வடிவமைக்கப்பட்ட பல கப் வளையல்கள் உள்ளன.

கடையம்:

istockphoto 1258158752 612x612 1

கடையம் அல்லது கடா வளையல் என்பது கனமான வேலைப்பாடுகள் உடைய வளையல் ஆகும். பாரம்பரிய நுணுக்கங்கள் உடன் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். பார்ப்பதற்கு பார்வையாகவும் எடுப்பான தோற்றம் உடையதாகவும் இந்த கடா வளையல்கள் அமைந்திருக்கும்.

குந்தன் வளையல்:

images 4 7

கற்கள் பதிக்கப்பட்ட வேலைப்பாடு உடைய இந்த குந்தன் வளையலானது வட மாநில பெண்களால் அதிகம் விரும்பி அணியக் கூடியதாக இருந்தது. ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களில் பிரசித்தி பெற்றவை இந்த குந்தன் வளையல்கள்.

மரத்தால் ஆன வளையல்:

istockphoto 1136943955 612x612 1

நவ யுக பெண்களின் பெரும்பாலான தேர்வு இந்த மரத்தாலான வளையல்கள் தான். மரத்தால் ஆன வளையல்களில் வண்ண வண்ண நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டு கற்கள், கண்ணாடி ஆகியன பதிக்கப்பட்டு கண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

இவை தவிர தங்கம், வெள்ளி, ஆக்சிடைஸ்டு வளையல்கள் விலை உயர்ந்த ரூபி, வைர கற்கள் பதித்த வளையல்களும் பெண்கள் மத்தியில் பிடித்தமானதாய் வலம் வருகின்றன.