கைக்குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா? எப்படி செய்வது???

By Sowmiya

Published:

பிறந்த குழந்தைக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாகும். குழந்தை பிறந்து 15 நாட்களில் இருந்தே இந்த எண்ணெய் மசாஜினை தொடங்கலாம். சில குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு அப்படி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கூட இந்த எண்ணெய் மசாஜனை செய்யலாம். எண்ணெய் மசாஜ் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை கட்டாயம் செய்ய வேண்டும். அதன் பிறகு விருப்பப்பட்டால் இரண்டு வயது வரை கூட தொடரலாம்.

குழந்தை வளர்ப்பு என்பது அதன் தொடக்க நிலையில் தாய்ப்பால் கொடுப்பது மட்டுமின்றி சரியான பராமரிப்பு, மசாஜ், குளியல் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த மசாஜ் ஆனது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிய கூடிய ஒன்றாகும்.

istockphoto 540369416 612x612 1

குழந்தைக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

குழந்தையின் உடல் முழுவதும் நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும்.

மசாஜ் செய்யும் பொழுது குழந்தை வாயுத் தொல்லை விடுபடும்.

செரிமானத் திறன் அதிகரிப்பதால் குழந்தைகள் தாய்ப்பாலை கக்கும் பிரச்சனை சரியாகும்.

தாய்க்கும் குழந்தைக்கும் ஆன உறவு வலுப்படும்.

குழந்தையின் சமூக வளர்ச்சித்திறன் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குழந்தையின் சருமத்தை வறட்சி அடையாமல் மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற இந்த மசாஜ் துணை புரிகிறது.

நல்ல மசாஜ் குழந்தைக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும்.

உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.

istockphoto 1180226515 612x612 1

மசாஜ் எப்படி செய்ய வேண்டும்:

நீங்களும் குழந்தையும் நல்ல ஓய்வு நிலையில் இருக்கும் பொழுது மசாஜ் செய்யுங்கள். மசாஜ் மிகவும் நிதானமாக செய்ய வேண்டும் அரக்கப்பறக்க செய்யக் கூடியது அல்ல. அதேபோல் குழந்தை அழுது கொண்டு இருக்கும் பொழுது செய்ய கூடாது. நல்ல மனநிலையில் விளையாடி சிரித்தபடி இருக்கும் பொழுது மசாஜ் செய்யலாம்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்கு ஒதுக்கி விடுங்கள் குழந்தைகள் தானாகவே இது மசாஜ் செய்யும் நேரம் என்பதை புரிந்து கொள்ள தொடங்கி விடுவார்கள்.

காலை நேரம் மசாஜ் செய்திட உகந்தது.

மென்மையான விரிப்பினை விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்துக் கொள்ளுங்கள்.

கைகளை சுத்தப்படுத்தி அதன் பின் உங்கள் கைகளில் எண்ணெயை எடுத்து கைகளால் சிறிது சூடாக்கி கால் பகுதியில் இருந்து மசாஜ் செய்ய தொடங்குங்கள்.

குழந்தையை அதிகம் அழுத்தாமல் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யும் பொழுது கடிகார வடிவில் வட்டமாக செய்யுங்கள்.

கைகள், உள்ளங்கை, உள்ளங்கால் என அனைத்திலும் மென்மையான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள்.

கழுத்து நிற்காத குழந்தைகளுக்கு கழுத்துப் பகுதிகளில் மசாஜ் செய்யும் பொழுது கவனமாய் செய்யவும்.‌

குழந்தைகளை குப்புற படுக்க வைக்கும் டம்மி டைம் என்று சொல்லக்கூடியதும் இந்த மசாஜின் போது அவசியம்

குழந்தையின் கண்களைப் பார்த்து பேசியபடி விளையாட்டு காண்பித்தபடி மசாஜ் செய்யுங்கள்.

குழந்தைக்கு தலைக்கு குளிக்க வைக்கும் பொழுது மட்டும் தலையில் எண்ணெய் மசாஜ் செய்தால் போதும் இல்லையேல் உடலுக்கு மட்டும் தினமும் மசாஜ் செய்யவும்.

நல்லெண்ணெய் ,கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் இவற்றை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.

மசாஜ் செய்து 15 நிமிடங்களுக்குப் பிறகு குழந்தையை வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கச் செய்யவும்.