ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
கடக ராசி அன்பர்களே! ராசியில் சூர்ய பகவான் இருப்பதால் வார்த்தைகளால் குழப்பங்களும், பிரச்சினைகளும் ஏற்படும். 2 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு குருவின் பார்வையும் சனி பகவானின் பார்வையும் கிடைக்கின்றது.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
பொருளாதாரரீதியாக எடுத்துக் கொண்டால் தனவரவு சிறப்பாகவே இருக்கும். உத்தியோகரீதியாக எடுத்துக் கொண்டால் வேலை செய்யும் இடத்தில் சிறிது எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும்.
குரு பகவானின் பார்வை 2 ஆம் இடத்திற்கு இருப்பதால் திருமண காரியங்களைப் பொறுத்தவரை மாத பிற்பகுதியில் எதிர்பார்த்த வரன் கிடைக்கப் பெறும்.
குழந்தை பாக்கியத்துக்குக் காத்துக் கொண்டு இருப்போருக்கு நல்ல செய்தி தேடி வரும். மருத்துவ உதவிகள் தேவைப்படும் மாதமாக இந்த மாதம் இருக்கும். உடல் ஆரோக்கியம் என்று எடுத்துக் கொண்டால் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறு சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
எதிரிகளின் பலம் அதிகரித்தாலும் அவர்களைச் சமாளிக்கும் வகையில் உங்களுக்கு வாக்குச் சாதுர்யத்தினைக் கொடுப்பார் குரு பகவான். எதிரிகளும் நண்பர்களாக மாறிப் போவர்.
பண விவகாரங்கள் லாபத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும்; வேலைவாய்ப்புரீதியாக தடுமாற்றங்கள் ஏற்படும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் உங்களின் வாக்குச் சாதுர்யம் அதிகரிக்கும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
வியாபாரிகளுக்கு வளர்ச்சி ஏற்படும் மாதமாக இருக்கும்; ஆனால் வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல்களால் ஏற்படும்.