இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு வங்கிகள் புதுப்புது டெக்னாலஜிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக வெர்ச்சுவல் என்ற டெக்னாலஜி மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த டெக்னாலஜியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் வெர்ச்சுவல் கிளையை தொடங்கியுள்ளதாகவும் மெட்டாவெர்ஸ் மூலம் தொடங்கியுள்ள இந்த கிளையில் பல தீர்வுகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெட்டாபேஸ் வெர்ச்சுவல் 3டி தன்மை கொண்டது என்றும் அங்கு வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வங்கியின் கொள்கைகள், சேவைகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை நிகழ்த்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வெர்ச்சுவல் கிளையை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த வெர்ச்சுவல் கிளையால் என்னென்ன நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.
* வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி அனுபவம் கிடைக்கும்
* உலகில் எங்கிருந்தும் வங்கி சேவைகளை அணுகலாம்
* வங்கி அதிகாரிகளுடன் எண்டெஹ நேரத்திலும் தொடர்பு கொள்ளும் திறன்
* வங்கியின் சிறப்பம்சங்கள் மற்றும் சேவைகளை வெர்ச்சுவல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மெட்டாவேர்ஸில் விர்ச்சுவல் கிளையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகும். வங்கியின் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது மற்றும் டிஜிட்டல் பேங்கிங் துறையில் இன்னும் அதிகம் முன்னேறும்.
ஜேபி மோர்கன் சேஸ், கேபி வங்கி மற்றும் கூக்மின் வங்கி ஆகிய வெளிநாட்டு வங்கிகள் மெட்டாவேர்ஸில் வெர்ச்சுவல் கிளைகளை தொடங்கி நிலையில் தற்போது இந்திய வங்கியும் மெட்டாவேர்ஸ் வங்கிச் சேவையை அளிக்கிறது. இதனையடுத்து மேலும் பல இந்திய வங்கிகள் வரும் ஆண்டுகளில் வெர்ச்சுவல் கிளைகளைத் தொடங்க வாய்ப்புள்ளது.