Motorola G42: ரூ.11,000 விலையில் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன்..!

By Bala Siva

Published:

பொதுவாக Motorola நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அதிக விலையில் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இந்நிறுவனம் வெளியிட்ட ஒரு ஸ்மார்ட் போன் தற்போது ரூ.11,000 ம் என்ற விலையில் விற்பனை ஆகி வருவது பயனர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

Motorola Moto G42 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் OLED டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல் ரெசலூசன் கொண்டது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் தளத்தில் இயங்கும் இந்த போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகிய 3 கேமிராவும், 16 மெகாபிக்சல் சென்சார் கொண்ட செல்பி கேமிராவும் உள்ளது.

Moto G42 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. கைரேகை சென்சார் மற்றும் ஸ்பிளாஸ்-ரெசிஸ்டண்ட் கொண்ட இந்த போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Motorola Moto G42 ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய விவரக்குறிப்புகள் இதோ:

* 1080 x 2400-பிக்சல் தீர்மானம் கொண்ட 6.4-இன்ச் OLED டிஸ்ப்ளே
* Qualcomm Snapdragon 680 பிராஸசர்
* 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம்
* 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ்
* ஆண்ட்ராய்டு 12 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
* 50 மெகாபிக்சல் பிரதான சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கேமிரா
* 16-மெகாபிக்சல் செல்பி கேமிரா
* 5000mAh பேட்டரி
* கைரேகை சென்சார், ஸ்பிளாஸ் எதிர்ப்பு

மொத்தத்தில் Motorola Moto G42 ஸ்மார்ட்போன் ஒரு நல்ல டிஸ்ப்ளே, திறமையான பிராஸசர் மற்றும் நீண்ட கால பேட்டரி ஆகியவற்றைக் கொண்ட ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்.