அனைவருக்கும் தங்களுடைய கூந்தல் பளபளப்பாக மிருதுவாக பட்டுப்போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. யாருமே வறண்டு போனது போல் காட்சி தரும் கூந்தலை விரும்ப மாட்டார்கள்.
கூந்தலை பளபளக்க வைக்க பல ரசாயன பொருட்கள் ஆன்லைனிலும் சந்தைகளிலும் கிடைக்கின்றன. இவை தற்சமயத்திற்கு கூந்தலை பளபளப்பாக்கினாலும் கூந்தலை சேதப்படுத்திட அதிக வாய்ப்பு உண்டு. பலருக்கு ஒவ்வாமை கூட ஏற்படலாம்.
எனவே இரசாயனம் இல்லாமல் எளிமையான முறையில் வீட்டிலேயே உங்கள் கூந்தலை பளபளக்க வைக்க முடியும். வெறும் பளபளப்பு மட்டும் இன்றி கூந்தலுக்கு ஊட்டம் தந்திடும். கூந்தல் சேதத்தை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
கூந்தல் பளபளப்பை அதிகரிக்கும் ஹேர் பேக்குகள்:
1. ஆலிவ் ஆயில் மற்றும் தேன்:
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் நான்கு ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்துக் கொள்ளவும்.
இவை இரண்டும் நன்றாக கலந்து மென்மையான கலவை ஆகும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.
கூந்தலை நான்கு பகுதிகளாக பிரித்து வேறு முதல் நுனி வரை நன்கு இந்த கலவையை தேய்த்துக் கொள்ளவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலச கூந்தல் மிருதுவாக பளபளப்பாக இருப்பதை பார்க்கலாம்.
2. தேங்காய் எண்ணெய்:
ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 5 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதன் உள் எண்ணெய் உள்ள கிண்ணத்தை வைத்து எண்ணெயை சூடு செய்யவும்.
என்னை சூடானதும் மிதமான சூட்டில் அந்த தேங்காய் எண்ணெயை முடியின் வேரிலிருந்து தலை முழுவதும் நன்கு மசாஜ் செய்யவும்.
இப்படி மசாஜ் செய்வதால் வேர் பகுதிகள் வலுவடையும் கூந்தல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
3. முட்டை வெள்ளை கரு:
இரண்டு முட்டைகளின் வெள்ளை கருவை எடுத்து அதனுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மிருதுவாக ஒரு பேக் போன்ற மதத்திற்கு வரும்வரை கலந்து கொள்ளவும்.
முடியை சிறு சிறு பகுதியாக பிரித்து இதனை அப்ளை செய்து கொள்ளவும்.
இப்பொழுது 30 முதல் 60 நிமிடங்களுக்குப் பிறகு தலை முடியை அலசினால் முடி ஆரோக்கியமாக இருக்கும். முட்டை கூந்தலை பளபளப்பாக வைப்பது மட்டுமின்றி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
4. வாழைப்பழம்:
ஒரு வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பௌலில் சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
இப்பொழுது இந்த பேக்கினை கூந்தலில் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு பிறகு அலசினால் கூந்தலில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம்.
5. கற்றாழை:
கற்றாழையின் உள்ளே இருக்கும் செல் போன்ற பகுதியை எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் பாதி வாழைப்பழம் சேர்த்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கட்டிகள் ஏதும் இல்லாத படி நன்கு கலந்ததும் முடியின் வேரிலிருந்து அப்ளை செய்யவும்.
இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு கூந்தலை அலசி விடவும்.
இதைத் தவிர தேங்காய்ப்பால் தடவியோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து கூந்தலில் தடவினாலும் கூந்தல் பளபளப்பாய் இருக்கும். பெரும்பாலும் நீங்கள் ஷாம்பு பயன்படுத்துபவர் என்றால் அதிக ரசாயனம் இல்லாத சல்பேட் இல்லாத ஷாம்பா என்று பார்த்து பயன்படுத்தவும்.