இந்தியர்களின் தகவல்களை திருட்டுத்தனமாக திரட்டுவதில் சீனா பல்வேறு வழிகளை பயன்படுத்தி வரும் நிலையில் கடந்த சில வாரங்களில் மட்டும் 2000 புதிய டொமைன்களை சீனா நிறுவனம் ஒன்று வாங்கி இருப்பதாகவும் ஆபாச வலைதளங்கள் மூலம் இந்தியர்களின் தகவல்களை அந்த வலைதளம் திருட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீன வலைத்தளங்கள் இந்தியர்களின் தகவல்களை திருடும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசு அதிகபட்சமாக சீனாவின் செயலிகளை கண்டுபிடித்து தடை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
நாடு முழுவதும் இணைய குற்றங்கள் அதிகம் பரவுவதற்கு சீனாவின் இணையதளங்கள் தான் காரணமாக உள்ளன என்பதும் குறிப்பாக கடன் வழங்கும் செயலிகள் பெரும்பாலும் சீனாவில் இருந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் திருட்டு, நிதி மோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்து வந்தாலும் புதுப்புது டொமைன்களில் இருந்து மீண்டும் தனது திருட்டுத்தனத்தை சீனா செய்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் சீனாவின் நிறுவனம் ஒன்று இரண்டாயிரம் புதிய டொமைன்களை வாங்கி இருப்பதாகவும் அந்த டொமைன்கள் மூலம் ஆபாச வலைதளங்களை ஆரம்பித்து அதன் மூலம் இந்தியர்களை தகவல்கள் திரட்டப்படுவதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டொமைன்கள் சீன மோசடியாளர்கள் வாங்கி இருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சூதாட்டம், ஆபாச காட்சிகள், சாட்டிங் வலைதளம் என பல்வேறு வகைகளில் இந்த டொமைன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த டொமென்களின் லிங்குகளை தெரியாமல் கிளிக் செய்து விட்டால் அவர்களுடைய தகவல்கள் திரட்டப்படுவது வாடிக்கையாக இருந்து கொண்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. எனவே பயனர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக மொபைல் போனில் மெசேஜ்கள் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.