நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் சினிமாவுக்காக இந்தியா வந்து அதன் பிறகு அவர் அடைந்த சறுக்கல்கள், தொல்லைகள், சோகங்கள் மற்றும் சந்தோஷங்கள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
நேபாள நாட்டின் ராஜகுமாரி மனிஷா கொய்ராலா. இவர் அரண்மனை வாழ்க்கையில் சொகுசாக வாழ்ந்தவர். படிப்பு முடித்தவுடன் இவர் 19 வயதில் சினிமாவில் நடிக்க விருப்பமடைந்து மும்பை வந்தார்.
மும்பையில் சில மாடலிங் செய்து வந்த மனிஷா கொய்ராலாவுக்கு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது படங்கள் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் வாய்ப்புகளும் குவிந்தன.
\
இந்த நிலையில் தான் மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’ திரைப்படத்திற்காக மனிஷா கொய்ராலாவின் புகைப்படத்தை பார்த்து அவரை நடிக்க அழைத்தார். மணிரத்னம் ஆடிஷனில் கலந்து கொண்ட மனிஷா கொய்ராலா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்பதை கேட்டவுடன் முடியாது என்று மறுத்துவிட்டு மீண்டும் மும்பை சென்று விட்டார்.
ஆனால் அவரது தோழிகள், நெருக்கமானவர்கள், திரை உலக நண்பர்கள் மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பை யாராவது விடுவார்களா என்று திட்டியதை அடுத்து அவர் மீண்டும் மணிரத்னத்திடம் வந்து தான் நடிக்க சம்மதம் என்று கூறினார். அப்படித்தான் உருவானது பம்பாய் திரைப்படம்
அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு புகழை பெற்று தந்தது. அதன் பின் அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்று சொல்லலாம். அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் திரைப்படத்திலும் நடித்தார்.
அதனை அடுத்து கமல்ஹாசன் உடன் ’ஆளவந்தான்’, ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்த மனிஷா, கடைசியாக தனுஷின் மாமியாராக ’மாப்பிள்ளை’ படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் மனிஷா கொய்ராலா புகழின் உச்சியில் இருந்த போது அவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக ’முதல்வன்’ படத்தில் நடித்தபோது அவர் மது அருந்திவிட்டு தாமதமாக படப்பிடிப்புக்கு வருவார் என்று கூறப்பட்டது.
இதனால் மன விரக்தி அடைந்த ஷங்கர் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தார். ஒரு பிரபல நடிகரின் மனைவி அவருக்கு கவுன்சிலிங் கொடுத்ததாகவும் கவுன்சிலிங் போது மனம் திருந்தி மனிஷா மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. ஒரு வகையில் மனிஷா கொய்ராலா வாழ்க்கையின் திருப்புமுனைக்கு அந்த நடிகரின் மனைவியே ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து பட வாய்ப்புகள் குறைந்த பிறகு அவர் மீண்டும் நேபாளத்திற்கே சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர் தனது தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொது சேவை செய்தார். அதன் மூலம் அவர் உலக அளவில் புகழ் பெற்றார்.
அதன் பிறகு அவருக்கு திடீரென புற்றுநோய் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை கண்டு கலங்காமல் அதற்கான சிகிச்சை எடுத்தார். அவர் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு அதன் பிறகு குணமாகியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர் நடிப்பு, மாடலிங், தொண்டு எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டு மன அமைதிக்காக ஆன்மீகத்தில் சில காலம் இருந்தார். இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க வந்தார். அப்போதுதான் அவருக்கு ரஜினியுடன் ’பாபா’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் தான் தனக்கு மிகப்பெரிய சறுக்கல் என்றும், அந்த படத்தில் நடித்தது தனது மிகப்பெரிய தவறு என்றும் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அதன்பின் மீண்டும் அவர் நேபாளம் சென்று தனது மன திருப்திக்காக பொது சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் விற்கப்படுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் குற்றம் என்ற நிலையில் அதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் மற்றும் காவல்துறையினருடன் பல குற்றவாளிகளை அவர் பிடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இன்று நேபாள நாடு நாட்டில் பெண்கள் தைரியமாக தெருவில் நடந்து செல்கிறார்கள் என்றால் அதற்கு மனிஷா கொய்ராலாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
புகழின் உச்சத்தில் இருந்த மனிஷா கொய்ராலா மது பழக்கத்தினால் ஒரு கட்டத்தில் ஜீரோவாகி அதன் பின்னர் மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து திரையுலகில் தனது கொடியை நாட்டினார். தற்போது நிம்மதியாக அவர் தொண்டு மற்றும் சேவையில் ஈடுபட்டு இருக்கின்றார். மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.