எலான் மஸ்க் அவ்வபோது ட்விட்டர் தளத்தில் புதிய புதிய அம்சங்களை தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அப்டேட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ட்விட்டரில் ராபிட் சான் என்ற பயனாளர் ஒருவர் ஸ்மார்ட் டிவிக்கான டிவிட்டர் செயலி ஒன்று உண்மையில் எங்களுக்கு தேவையாக உள்ளது என்றும் ட்விட்டரில் ஒரு மணி நேரம் வீடியோவை என்னால் காண முடியவில்லை என்று பதித்துள்ளார்.
உடனே இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் அதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அந்த நபர் பாராட்டுகிறேன். யூட்யூப்க்கான சந்தாவை ரத்து செய்துவிட்டு அதனை திரும்பி பார்க்காத ஒரு நாள் வரும் என பதிவிட்டுள்ளார்.
அதே போல் ட்விட்டர் தளம் விரைவில் கிரியேட்டர்களுக்கும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதனை ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கி இருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் இந்த அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ட்விட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் ட்வீட்களில் விளம்பரங்களை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ- ரிலீஸ் ஆன படங்களின் லிஸ்ட் இதோ!
ஆனால் இதற்கு கிரியேட்டர் வெரிஃபைடு பெற்று இருக்க வேண்டும். குறிப்பாக வெரிஃபைட் பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்று எலான் மாஸ்க் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.