விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ-ரிலீஸ் ஆன படங்களின் லிஸ்ட் இதோ!

நடிகர் விஜய்யின் 49வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த மகிழ்ச்சியின் உச்ச கட்டமாக இன்று நடிகர் விஜய் நடித்த சில படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் படம் என்றாலே அவரை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான வாரிசு படம் தான். இந்தப்படம் சுமார் 300 கோடி வரை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 49வது பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடித்து மாபெரும் ஹிட் அடித்த படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.

மேலும் நேற்று இரவு காட்சி தொடங்கிய நிலையில் இன்று ஒரு நாள் முழுக்க விஜய் நடித்த பல படங்கள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2005 ஆம் ஆண்டில் வெளியான திருப்பாச்சி, 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி, 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி, 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல், 2021 ஆம் ஆண்டில் வெளியான மாஸ்டர் ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்பயணம் குறித்து ஒரு பார்வை!

இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று லியோ படத்தில் இருந்து நா ரெடி பாடலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவலும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...