உலகம் முழுவதும் AI டெக்னாலஜி தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது என்பது அதை பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ChatGPT, Bard, Bing பெபோன்ற தரமான ஒரிஜினல் AI டெக்னாலஜி இருந்தாலும் பல போலியான AI டெக்னாலஜி செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதாக கூறப்படுகிறது
இவை போலிகள் என்று தெரியாமல் நாம் நம்முடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தால் பல ஆபத்துக்கள் நேரிடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உங்கள் போன் எண்ணில் உள்ள காண்டாக்ட் தகவல்கள், கிரெடிட் கார்டு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் என்றும் உங்கள் ஃபோனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் திருடப்படலாம் என்றும் அது மட்டும் இன்றி உங்கள் வங்கி கணக்கில் உள்ள முக்கிய விவரங்களும் திருடப்பட்டு மோசடிகள் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே AI செயலிகளை பதிவிறக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. போலி AI டெக்னாலஜி செயலிகளை பதிவிறக்கம் செய்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
* Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
* பயன்பாட்டைப் பதிவிறக்கும் முன் அதன் மதிப்புரைகளைப் படிக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக இருந்தால் டவுன்லோடு செய்ய வேண்டாம்,.
* இலவச சோதனைகள் அல்லது சந்தாக்களை வழங்கும் பயன்பாடுகளில் கவனமாக இருங்கள். இந்தப் பயன்பாடுகள் முறையானதாக இருக்கலாம், ஆனால் அவை மோசடிகளாகவும் இருக்கலாம்.
* செயலி போலியா? அல்லது ஒரிஜினலா? என்ற குழப்பம் இருந்தால் அதை டவுன்லோடு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
* நீங்கள் போலியான ChatGPT செயலியைப் பதிவிறக்கியிருப்பதாக சந்தேகம் அடைந்தால் உடனடியாக அதை டெலிட் செயவும்.
* புகழ்பெற்ற வைரஸ் தடுப்பு அல்லது மால்வேர் எதிர்ப்பு செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலை அவ்வப்போது ஸ்கேன் செய்ய வேண்டும்.