எளிதாக கிடைக்கும் பலா பழத்தில் இவ்வளவு நன்மைகளா…. பல தித்திப்பான பலன்கள் இங்கே!

By Velmurugan

Published:

கோடையில் பலாப்பழம் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. கோடையின் சூட்டை தணிக்க பல பழங்கள் சந்தைகளில் விற்கப்படும். அதில் பலாப்பழமும் ஒன்று. பொதுவாக பலாப்பழத்தை விரும்பாதவர்கள் வெகு குறைவாக தான் இருப்பார்கள்.

அதுபோல இப்பழத்தில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் உள்ள நார் சத்து நல்ல மூலாதாரம் ஆகும். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பலாவை உடல் ஜீரணம் செய்ய நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதாக அமையும். இதில் கிளைசெமிக் குறியீடுகள் குறைவாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை பராமரிக்கிறது.

மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவு அதிகம் சாப்பிட வேண்டும். பலாவில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்தநாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இதனால் ரத்த அழுத்த பிரச்சனையை நீக்குகிறது .

அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் பலாவை சாப்பிட்டு வந்தால் வயிற்றின் PH அளவை சமநிலைப்படுத்தி செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் அல்சர் பிரச்சனையை மெதுவாக குணமாக்கும். மேலும் அல்சரால் ஏற்படும் வாய்ப்புண்களையும் குணப்படுத்தும்.

மஞ்சளில் பல நன்மைகள் இருந்தும் இந்த நோயாளிகள் சாப்பிட்டாள் ஆபத்தா… பயனுள்ள தகவல் இதோ!

பலாப்பழத்தில் விட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது. இது கண்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் செல்களின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. அந்த வகையில் மாலை கண் நோய் உள்ளிட்ட பிரச்சனைகளை தடுத்து நல்ல கண் பார்வைக்கு பலா உதவுகிறது. இந்த அனைத்து நோய்களுக்கும் பல தீர்வாக இது அமைகிறது.