நெட்பிளிக்ஸ் உள்பட பிரபல செயலிகளின் போலி செயலிகள் ஆன்லைனில் உலாவி வருவதாகவும் அந்த செயலிகள் உங்கள் போனில் ஒருவேளை இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு பிரபல நிறுவனத்தின் செயலியை போலவே போலி செயலிகளை நிறுவுவதில் பல ஹேக்கர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் உள்பட 10 வகையான பிரபல செயலிகளின் போலிகள் ஆன்லைனில் உலா வருவதாகவும் அவற்றை ஒரிஜினல் என்று நம்பி போனில் இன்ஸ்டால் செய்தால் நம் ஃபோனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் பல ஆபத்துகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு புதிய மால்வேரை கண்டுபிடித்தனர். இந்த மால்வேர் மூலம்தான் போலி செயலிகள் உலா வருகின்றன என்றும் இந்த போலி செயலிகளை இன்ஸ்டால் செய்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த போலி செயலிகளை இன்ஸ்டால் செய்தால் நிதி தகவல்களை திருடும் வாய்ப்பு இருப்பதாகவும் அது மட்டும் இன்றி நம்முடைய தனிப்பட்ட டேட்டாக்கள் முழுவதும் ஹேக்கர்கள் கையில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள போலி செயலிகளின் தகவல்கள் பின்வருமாறு:
Game cracks
Games with unlocked features
Free VPN
Fake videos
Netflix
Fake tutorials
YouTube without ads
TikTok without ads
Cracked utility programs: weather, pdf viewers, etc
Fake security programs
மேற்கண்ட செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் அவை உண்மையானதுதானா? என்பதை உடனடியாக சோதனை செய்து ஒருவேளை போலியாக இருந்தால் உடனே அன் – இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.