சந்திரயான்-3 விண்கலம் அடுத்த மாதம் மத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் கல்லூரி கண்காட்சி ஒன்றிய பங்கேற்ற இஸ்ரோ தலைவர் சோம்நாத் இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்- 3 விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
சந்திரயான் திட்டத்தின் ஒரு பகுதியான மூன்றாவது விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி எம் கே 3 செலுத்தப்பட உள்ளது. இந்தியாவின் கனமான ஏவுகனமான இதை மார்க்- 3ல் இருந்து விண்ணில் ஏவத் திட்டம் இடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விண்கலம் உந்து விசை,லண்டர் மற்றும் ரோவர் ஆகிய மூன்று அமைப்புகளின் கலவையில் இயக்கப்படும் என கூறினார். சந்திரயான் 3 என்பது சந்திரயான் 2 பயணத்தின் தொடர்ச்சியாகும்.
இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லாடர், ரோவர் கட்டமைப்பை கொண்டுள்ளது என்று தெரிவித்தார். அவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் சந்திரயான் 3 விண்கலம் அதன் சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடிந்ததாக கூறினார்.
நித்தியானந்தா- க்கு போட்டியாக தனி நாட்டை உருவாக்கிய அமெரிக்கர்! சுவாரஸ்யமான தகவல் இதோ!
மேலும் அனைத்து சோதனைகளும் சுமூகமாக நடைபெற்றுள்ளதால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இந்தியாவின் லட்சியத்திட்டமான சந்திரயான்- 3 அடுத்த மாதம் 12 முதல் 19ஆம் தேதிக்கு இடையில் விண்ணில் ஏவப்படும் என்றும் சோம்நாத் கூறினார்.