கலர் புல்லான,துருப்பிடிக்காத புதிய வகை சிலிண்டர்!.. இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்!..

Published:

நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகள், ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது.

இன்றைய நடைமுறையில் உள்ள சிலிண்டர்கள் அனைத்தும் எடை அதிகமானதாகவும் பயன்படுத்திய சில மாதங்களில் துருப்பிடிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய காம்போசிட் சிலிண்டரை கடந்த 2021ல் அறிமுகம் செய்தது.

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் இந்த சிலிண்டரின் பயன்பாடு குறைவாகவே இருந்து வருகிறது. பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த சிலிண்டர் பாலிமர் ஃபைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலித்தீன் தெர்மோபி பிளாஸ்டிக் ஆல் ஆன வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 குறித்து இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

மிகவும் உறுதித் தன்மை கொண்ட இந்த சிலிண்டர் வாய்வு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50% எடை குறைவானது.

எனவே பெண்கள் இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அத்துடன் இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் 3500 ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையாக அதாவது செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.

பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கனவே செலுத்திய தொகை, புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அதை செலுத்தினால் போதுமானது. மேலும் புதிய சிலிண்டர்களை பெற முன் பதிவு செய்ய 8655677255 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகை சிலிண்டர்களின் விற்பனையை நாடு முழுவதும் தீவிரப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முயற்சித்து வருகிறது. கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டிய காரணத்தினால் பாதுகாப்பு நிறைந்த இந்த வகை சிலிண்டரை வாங்குவதில் பொதுமக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.

நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியன் ஆயில் டீலர்கள் வாயிலாக வலியுறுத்தி வருகிறது. இந்தியன் ஆயில் கேஸ் ஏஜென்சி புதிய சிலிண்டர் குறித்து தொலைபேசி வழியாக பேசி வாடிக்கையாளர்களிடம் இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் கூடுதலாக 1150 ரூபாய் செலுத்தி புதிய சிலிண்டருக்கு மாற வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...