10ம் வகுப்பு பாடத்தில் சில பாடம் அதிரடி நீக்கம்! அதிரடி அறிவிப்பு!

By Velmurugan

Published:

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம் பெற்று இருந்த சீட்டுக்கட்டு கணக்குப்பகுதி நீக்கப்பட்டுள்ளது பள்ளிக்கல்வி துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ததோடு இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநரும் அனுமதி வழங்கி இருக்கிறார்.

இதனுடைய ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான பாடப்பகுதிகள் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம் பெற்றிருந்த சீட்டுக்கட்டு தொடர்பான பாடப் பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சீட்டுக்கட்டு தொடர்பான ஐந்து கேள்விகள் இடம் பெற்றிருந்த நிலையில் அந்த ஐந்து கேள்விகளும் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன .

சவுதியின் திடீர் அறிவிப்பு! உயரும் பெட்ரோல்,டீசல் விலை !

நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உள்ள பாடப் புத்தகத்தில் இந்த புதிய பகுதி அமலுக்கு வருகிறது.