ChatGPTயால் வேலையிழந்த கண்டெண்ட் ரைட்டர்.. ஏசி மெக்கானிக்காக மாறிய பரிதாபம்..!

By Bala Siva

Published:

ChatGPT என்ற AIதொழில்நுட்பத்தால் வேலை இழந்த கன்டென்ட் ரைட்டர் ஒருவர் தற்போது தனது தந்தையின் தொழிலான ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வருவதாக கூறியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

AI தொப்ழில்நுட்பம் பலருடைய வேலையை பறித்து வருகிறது என்பதும் குறிப்பாக முதல் நபராக பாதிக்கப்பட்டது கண்டெண்ட் ரைட்டர் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றி கட்டுரை வேண்டும் என்றாலும் AIதொழில்நுட்பம் மிக விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கொடுத்து விடுவதால் கண்டெண்ட் ரைட்டர் என்ற பணியே இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும் என்ற ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜான் கடந்த 10 ஆண்டுகளாக கண்டெண்ட் ரைட்டராக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென AI தொழில்நுட்பம் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் திடீரென அதிர்ச்சி அடைந்த நிலையில் அவருக்கு தனது தந்தையின் ஏசி டெக்னீசியன் மற்றும் பிளம்பர் பணி ஞாபகம் வந்தது. இதனை அடுத்து அந்த தொழிலை அவர் செய்ய தொடங்கியுள்ளார். தற்போது தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தேவையான வருமானம் வருவதாகவும் இதில் தான் திருப்தி அடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது தன்னுடைய திறமையான பணி காரணமாக தனக்கு அதிக வேலைகள் வந்து கொண்டிருப்பதாகவும் கண்டெண்ட் ரைட்டர் தொழில் கைவிட்டாலும் தனது தந்தையின் சொந்த தொழில் தன்னை கைவிடவில்லை என்றும் அவர் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கன்டென்ட் ரைட்டர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் அவர் சோகத்தில் இருந்த போது தான் ஏசி யூனிட் சரி செய்யும் வணிக நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை சந்தித்ததாகவும் இவருடைய கதையை கேட்ட அவர் வேலையில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது ஏசி டெக்னீஷியன் மற்றும் பிளம்பர் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வருவதாக அவர் கூறியுள்ளர்.

AI டெக்னாலஜி பலருடைய வேலையை பறித்தாலும் அதை அதனால் சோர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை என்றும் கண்டிப்பாக சுய தொழில் அல்லது வேறு ஏதாவது வேலை கிடைக்கும் என்று எனவே வேலை இழந்த யாரும் தங்களது நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும் ஜான் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பத்தால் ஒரு பக்கம் வேலை போனாலும் சுயதொழில் ஆரம்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.