3 விக்கெட் மட்டுமே.. சதமடித்த ஹெட்.. அஸ்வினை எடுத்திருக்கலாமோ?

By Bala Siva

Published:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரரான காவஜா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும் டேவிட் வார்னர் ஒரு சில அதிரடி ஷாட்களை அடித்து 43 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து லாபு சாஞ்சே விக்கெட்டும் சீக்கிரம் எழுந்து விட்டது. இந்த நிலையில் மூன்று விக்கெட் விழுந்த பிறகு இந்திய பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை.

rohithகுறிப்பாக ஹெட் சதமடித்து விட்டார் அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் களத்தில் வலுவான நிலையில் இருப்பதால் இந்த கூட்டணி மிகப்பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலிய எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சில் ஆரம்ப கட்டத்தில் விக்கெட் விழுந்தாலும் 24 வது ஓவருக்கு பின்னர் விக்கெட்டை விழவில்லை. இந்த நிலையில் தான் அஸ்வின் இருந்திருந்தால் கண்டிப்பாக இடைப்பட்ட நேரத்தில் விக்கெட் விழுந்திருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தற்போது ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இதே ரீதியில் சென்றால் 500 ரன்கள் முதல் இன்னிங்சில் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியாத இந்திய அணி பேட்டிங் மூலம் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.