இந்தியாவில் உலகின் பல முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவை சேர்ந்த Tecno Camon மொபைல் நிறுவனம் தற்போது புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Tecno Camon 20 ஸ்மார்ட் ஃபோன்கள் தற்போது இந்திய சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் போன்கள் இந்தியாவில் உள்ள நொய்டாவில் அசெம்பிள் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த போன்கள் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டு மொபைல் போன் உற்பத்தியை தொடங்கிய Tecno Camon நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் ஆகி இருக்கும் புதிய Tecno Camon 20 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் எந்த அளவுக்கு பயனர்களின் வரவேற்பு பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
Tecno Camon 20 ஸ்மார்ட்போனி அடிப்படை மாடல், ரூ.14,999. இது 6.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 செயலி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு, 64 மெகாபிக்சல் டிரிபிள் லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு மற்றும் 16 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Tecno Camon 20 5ங் மாடலின் விலை ரூ.19,999 மற்றும் 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியா டெக் டைமன்சிட்டி 900 பிராசசர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு, 50 மெகாபிக்சல் டிரிபிள்- லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு, மற்றும் 16 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா.
Tecno Camon 20 பிரிமியர் மாடல் விலை ரூ.21,999. இது 6.67-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 செயலி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு, 64 மெகாபிக்சல் குவாட்-லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு மற்றும் 48 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேற்கண்ட மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகின்றன. மேலும் 18W வேகமான சார்ஜிங்கிற்கு தேவையான 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. பிங்கர் பிரிண்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல அம்சங்களுடன் அவை வருகின்றன.