பொறியியல் படிப்பில் வந்து குவியும் மாணவர்கள் !

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர சுமார் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு விட கூடுதலாக 17,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

2023-24 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 8668 பேர் விண்ணப்ப பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுமார் 3,000 முதல் 16,000 பேர் வரை விண்ணப்ப பதிவை மேற்கொண்டனர்.

இந்நிலையில் விண்ணப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி இருப்பதாக பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நடைபாண்டில் 17760 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பகட்டணம் செலுத்தியவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 9-ஆம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும்.

தொடர்ந்து வரும்  20-ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ள நிலைகள் 26 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அடுத்த மாதம்  2-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் வாபஸா? தொடர்கிறதா? மாறி மாறி வரும் செய்திகளால் பரபரப்பு..!

ஜூலை  2-ஆம் தேதி முதல்  5-ஆம் தேதி வரை முதலில் மாற்று திறனாளிகள் முன்னாள் படை வீரர்கள் விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வும்,  7-ஆம்தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.