ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட் போன் தற்போது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் சியாமி இணையதளங்களில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக விற்பனை ஆகி வரும் நிலையில் இந்த சலுகை விலை ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த போன் குறித்த நிறை குறைகள் குறித்து தற்போது பார்ப்போம்
ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 4 Gen 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 120Hz ரெசலூசன், 6.67-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 48MP டிரிபிள் கேமரா அமைப்பு, 13MP செல்பி கேமிராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு, மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு.
விலை விபரம்:
* 4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு: ரூ 14,499
* 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு: ரூ 15,999
* 6 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு: ரூ 17,499
ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட் போனின் நிறைகள்:
ரெட்மி நோட் 5ஜி பயனர்களுக்கு உறுதியான பேட்டரி ஆயுளை வழங்கும். தெளிவான புகைப்படம் எடுக்கும் கேமிராக்கள், கேமிங் பயன்பாட்டுக்கு சிறந்ததாக இருக்கும். 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும். .
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போது ஸ்க்ரோலிங் செய்தல், கால் அழைப்புகள் மற்றும் மொபைலில் வழக்கமான விஷயங்களைச் செய்வதில் உங்களுக்கு நிறைவை தரும்.
ஆனால், இந்த சாதனம் மூன்று முக்கிய குறைகளை கொண்டுள்ளது. அதில் ஒன்று Genshin Impact மற்றும் BGMI போன்ற கிராஃபிக் டிமாண்டிங் கேம்களை விளையாடுவதற்காக வடிவமைக்கப்படவில்லை. இதுபோன்ற கேம்களை விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக கேமரா சரியான அளவில் இல்லை, குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் எடுக்கும் புகைப்படங்கள் தெளிவாக இருக்காது. வெளிச்சம் நன்றாக இருந்தால் மட்டுமே நல்ல புகைப்படங்களை எடுக்கலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் உள்ளது. தற்போது பெரும்பாலான பயனர்கள் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.