ஒரே ஒரு தவறு செய்த மும்பை அணி.. பறிபோன ஃபைனல் வாய்ப்பு..!

By Bala Siva

Published:

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான பிளே ஆப் 2 போட்டியில் மும்பை அணி செய்த ஒரே ஒரு தவறு காரணமாக பைனல் செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்த குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணியின் சுப்மன் வில் மிக அபாரமாக விளையாடி 129 ரன்கள் அடித்தார் என்பதும் இந்த வெற்றிக்கு அவர்தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து குஜராத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 234 என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடிய நிலையில் முதல் ஓவரிலும், மூன்றாவது ஓவரிலும் அடுத்தடுத்து தொடக்க ஆட்டக்காரர்களை இழந்தது. அதன் பின்னர் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஓரளவுக்கு அடித்து ஆடினாலும் இவர்கள் இருவரும் அவுட் ஆனவுடன் மளமளவென விக்கெட் விழுந்ததால் 18.2 ஓவர்களில் 171 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் மும்பை அணிந்து பந்து வீசியபோது ஆறாவது ஓவரில் சுப்மன் கில்லுக்கு அழகான கேட்ச் கிடைத்தது. ஆனால் அந்த கேட்சை டிம் டேவிட் தவற விட்டார். இந்த ஒரே ஒரு தவறு தான் மும்பை அணியின் தோல்விக்கு காரணமாக தெரிகிறது. அந்த கேட்சை மட்டும் அவர் பிடித்து இருந்தால் சுப்மன் கில் 31 ரன்னில் ஆட்டம் இழந்திருப்பார் என்பதும் 200 நாட்களுக்குள் குஜராத் அணியை சுருட்டி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கேட்சை தவறவிட்ட காரணமாக மும்பை அணியை நேற்று பைனல் செய்யும் வாய்ப்பை இழந்தது என்று வர்ணனையாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தான் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.