இந்தியாவில் சமீபத்தில் வெளியான கூகுள் பிக்சல் 7a மற்றும் ஒன்ப்ளஸ் 11R பயனளிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த இரண்டு ஃபோன்களில் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்
கூகுள் பிக்சல் 7a மற்றும் ஒன்ப்ளஸ் 11R இரண்டும் 2023ஆம் ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்கள் ஆகும். இவை பல ஒற்றுமைகளையும் சில வேறுபாடுகளையும் கொண்டுள்ளன
விலை: கூகுள் பிக்சல் 7a இந்தியாவில் ரூ.43,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஆனால் ஒன்ப்ளஸ் 11R ஆனது ரூ.39,349 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கூகுள் பிக்சல் 7a சற்று விலை அதிகம் என்றாலும் இது நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் சிறந்த கேமரா போன்ற சில கூடுதல் அம்சங்களுடன் வருகிறது.
வடிவமைப்பு: கூகுள் பிக்சல் 7a மற்றும் ஒன்ப்ளஸ் 11R இரண்டும் நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளன. கூகுள் பிக்சல் 7a ஒரு பிளாஸ்டிக் பாடியையும் ஒன்ப்ளஸ் 11R ஆனது கண்ணாடி பாடியையும் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்: கூகுள் பிக்சல் 7a ஆனது கூகுளீன் Tensor G2 SoC ஆல் இயக்கப்படுகிறது, அதே சமயம் ஒன்ப்ளஸ் 11R ஆனது Qualcomm இன் Snapdragon 8+ Gen 1 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் பிக்சல் 7a 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜையும், ஒன்பிளஸ் 11ஆர் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜையும், கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல்கள் ரெசலூசன் கொண்ட 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஒன்ப்ளஸ் 11R ஆனது 2772 x 1240 பிக்சல்கள் ரெசலூசன் கொண்ட 6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 7a 64 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது. ஒன்ப்ளஸ் 11R ஆனது 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் 7a 4385mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, ஆனால் ஒன்ப்ளஸ் 11R 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இரண்டுமே வேகமான சார்ஜிங் தன்மை கொண்டது..