ஆப்பிள் iOS 16.5 புதிய அப்டேட்.. ஐபோன் பயனர்களுக்கு கொண்டாட்டம்..!

By Bala Siva

Published:

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கான iOS 16.5 ஐ வெளியிட்ட நிலையில் இந்த புதிய அப்டேட்டில் வால்பேப்பர், ஆப்பிள் செய்திகளில் விளையாட்டு தகவல் மற்றும் சில அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. iOS 16ஐ ஆதரிக்கும் அனைத்து iPhone மாடல்களுக்கும் இப்போது இந்த அப்டேட் கிடைக்கிறது.

புதிய பிரைட் செலிப்ரேஷன் வால்பேப்பர் என்பது LGBTQ+ என்ற அம்சத்தை கொண்டாடும் வண்ணமயமான வடிவமைப்பாகும். வால்பேப்பர் பல்வேறு வண்ணங்கள் மற்றும் பாணிகளில் கிடைக்கும் என்றும், மேலும் இது ஸ்க்ரீனை லாக் செய்யும்போது அல்லது முகப்புத் திரையில் பயன்படுத்தப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

apple 1572533686 1608454916

அதேபோல் ஆப்பிள் செய்திகளில் இனி விளையாட்டு தகவல்கள் கிடைக்கும் என்பது பயனர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. பயனர்கள் பின்பற்றும் அணிகள் மற்றும் அனைத்து விளையாட்டு செய்திகள் இனி கிடைக்கும் என்பதால் விளையாட்டு பிரியர்கள் ஆர்வமாக இனி செய்திகளை படிக்கலாம்.

மேலும் IOS 16.5 ஆனது ஸ்பாட்லைட், கார்ப்ளேயில் உள்ள பாட்காஸ்ட்கள் மற்றும் ஸ்கிரீன் டைம் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களுக்கான திருத்தங்கள் உட்பட பல திருத்தங்களையும் இந்த ஐஓஎஸ் உள்ளடக்கியுள்ளது. மேலும் சமீபத்திய சைஒபர் அச்சுறுத்தல்களிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புப் புதுப்பிப்புகளும் இந்த அப்டேட்டில் அடங்கும்.

iOS 16.5ஐப் பதிவிறக்க, உங்கள் iPhone இல் செட்டிங்ஸ் பயன்பாட்டைத் திறந்து பொது > மென்பொருள் புதுப்பிப்பு என்பதற்கு செல்லவும். புதுப்பிப்பு கிடைத்தால், டவுன்லோடு மற்றும் இன்ஸ்டாலேஷன் என்பதை கிளிக் செய்யவும்.