வெப்ப தாக்கத்தில் இருந்தால் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இயல்பை விட நடப்பாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அதிகப்படியான வெப்ப தாக்கத்தில் இருந்த தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
தண்ணீர் தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவெளியில் குடிநீரை அருந்த வேண்டும் .
லேசான ஆடைகள், உடலை இறக்கி பிடிக்காத ஆடைகள், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் .
வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் .
வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, எலுமிச்சை சாறு, மோர், பழ ரசங்கள் ஆகியவற்றையும் பருகலாம்.
வெளியில் பயணம் மேற்கொள்ளும் போது கட்டாயம் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
சென்னையில் ரயில் நிலையத்தில் நடந்த பரபரப்பு! அதிஷ்டா வசமாக தப்பித்த மக்கள்!
அதிக புரதம், மாமிச கொழுப்பு சத்துள்ள உணவுகள், கார வகைகளை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் முதியோர் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.