சென்னையில் ரயில் நிலையத்தில் நடந்த பரபரப்பு! அதிஷ்டா வசமாக தப்பித்த மக்கள்!

சென்னை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பெட்டிகள் இரண்டாகப் பிரிந்ததால் மிகப்பெரிய ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் ரயில் சேவை அதாவது மின்சார ரயில் சேவை முற்றிலுமாக ஏழு மணி வரை பாதிப்பு ஏற்பட்டது.

காலையில் அதாவது சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வழியாக மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு வந்தது மாம்பலம் ரயில் நிலையம் வரை அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து அந்த மின்சார ரயில் ஆனது சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு 5.22 மணிக்கு வந்தடைந்தது.

அந்த ரயிலானது பயணிகளை இறக்கி விட்டு விட்டு புறப்படும் போது திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டுள்ளது. அப்போது ரயில் பெட்டி இரண்டாக பிரிந்து உள்ளது. அதாவது ரயில் இன்ஜின் உள்ள பகுதியிலிருந்து நான்கு பெட்டிகளும் பின்பகுதியில் உள்ள என்ஜின் பகுதியில் இருந்து எட்டு பெட்டிகளும் இரண்டாக பிரிந்தது .

இதைக் கண்டறிந்த மின்சார ரயில் இயக்குனர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் ஒரு மிகப்பெரிய ஒரு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக இந்த ரயிலானது இரண்டாக பிரிந்த நிலையில் ரயில் ஆனது ஓடும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தால் ஒரு மிகப்பெரிய விபத்தை சந்தித்திருக்கும். புறப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் அந்த மின்சார ரயிலானது சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

உடனடியாக ரயில்வே அதிகாரிகள் இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வந்தார்கள். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அதிகாலை 7 மணி வரை இந்த மின்சார ரயிலானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் தான் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லக்கூடிய மின்சார ரயில் சேவை பாதிப்படைந்தது .

இதனால் அதிகாலையிலேயே பணிகளுக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள் பாதிப்பு அடைந்தனர். மேலும் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த ஒரு பரபரப்பான சூழலில் சைதாப்பேட்டை அந்த பகுதியில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இந்த ரயிலானது பின்னர் இயக்கப்பட்டு தாம்பரம் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அதாவது பிளாட்பாரம் எண் இரண்டில் இந்த ரயில் விபத்து நடைபெற்ற சூழ்நிலையில் தற்போது வரை பிளாட்பாரம் இரண்டு வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை.

டான்ஸ் ஆடிய “பில்லர்” – வீடியோ எடுத்த மாணவர்கள்.. சமூகவலைத்தளங்களில் வைரல் !

தற்போது பிளாட்பாரம் எண் நான்கு வழியாக மின்சார ரயில் சேவை இடத்தை தொடங்கி இருக்கிறது. பிளாட்பாரம் எண் நான்கு வழியாக பயணிகள் பயணிக்குமாறு ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் தான் மின்சார ரயில்கள் ஒரு சில மாற்றத்திற்கு பின்னர் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 40 நிமிடத்தில் இந்த தவறுகள் சரிசெய்யப்பட்டு தொடர்ந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.