திடீரென காவல்துறையில் புகார் அளித்த சச்சின் தெண்டுல்கர்: அதிர்ச்சி காரணம்..!

By Bala Siva

Published:

சச்சின் டெண்டுல்கர் திடீரென தனது உதவியாளர் மூலம் மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர் என்பதும் இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு அவர் தான் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் என்றால் இந்தியாவில் ஒரு தனி மரியாதை இருக்கும் என்றும் அவரது பெயரை சொன்னாலே காந்தம் போல் ரசிகர்களை இழுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சச்சின் தெண்டுல்கர் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் மற்றும் குரலை மோசடியாக பயன்படுத்தி மருந்து நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சச்சின் டெண்டுல்கர் அந்த நிறுவனத்தின் போது நடவடிக்கை எடுக்க காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் பெயரில் sachinhealth.in என்ற இணையதளத்தை ஆரம்பித்து சச்சின் டெண்டுல்கர் பேசுவது போல் குரலையும் பதிவு செய்து தங்களது மருந்து தயாரிப்புகளை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த மருந்து நிறுவனத்திற்கு தனது பெயரையோ குரலையோ பயன்படுத்த தான் அனுமதி அளிக்கவில்லை என்றும் மோசடியாக தனது புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அந்த நிறுவனம் செய்து வருவதாகவும் சச்சின் டெண்டுல்கரின் உதவியாளர் புகார் அளித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 465 (போலி) மற்றும் 500 (அவதூறு) ஆகியவற்றின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் தவிர, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி கூறினார்.