இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சூரியகுமார் யாதவ் மிக அபாரமாக பேட்டிங் செய்து கடைசி பந்தில் சிக்சர் செஞ்சுரி அடித்து செஞ்சுரி போட்டதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது போட்டியான இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே போட்டியின் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்தது.
மும்பை அணியின் தொடக்கட்டக்காரர்களான இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா 31 மற்றும் 29 ரன்கள் அடித்து சுமாரான தொடக்கத்தை கொடுத்த நிலையில் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடினார். அவர் 49 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் 19.5 ஓவரில் 97 ரன்கள் சூர்யகுமார் யாதவ் அடித்த நிலையில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து செஞ்சுரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் சில நிமிடங்களில் குஜராத் அணி 219 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா, சாஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லர் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் 219 என்ற இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.