இந்த Number-ல் இருந்து Call வந்தால் நீங்கள் அவ்வளவு தான்..வெளியான அதிர்ச்சி தகவல்!

By Velmurugan

Published:

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்கள் வெளிநாட்டு whatsapp கால் மோசடி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பிளஸ் +84,+62,+63, +212, +917 ஆகிய எண்ணில் தொடங்கும் மலேசியா கென்யா எத்தியோப்பியா வியட்நாம் போன்ற நாடுகளின் எண்கள் மூலமாக பல்வேறு அழைப்புகள் whatsapp மூலமாக வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இதுபோன்ற தெரியாத whatsapp எண்ணில் இருந்து வரும் வெளிநாட்டு கால்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

இது தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு போலீசாரின் கவனத்திற்கு சென்றதை எடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் லிங்க் இன், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள பக்கத்தின் மூலமாக நட்பாக பழகி மொபைல் எண்களை பெற்று வெளிநாட்டிலிருந்து பேசுவது போல் whatsapp கால் மூலமாக மோசடி செய்வது தெரிய வந்துள்ளது .

அவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் இந்தியாவை சேர்ந்தவர்களே விபிஎன் நெட்வொர்க் மூலம் வெளிநாட்டு எண்களில் இருந்து பேசி மோசடியை அரங்கேற்றுவதும் தெரியவந்துள்ளது. முதலில் நட்பாக பேசி பரிசு பொருள் அளிப்பதாக தெரிவித்து, பின்பு விலை மதிப்பு அதிகம் உள்ள பொருள் அனுப்பப்படுவதாக கூறி மோசடி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

விலைமதிப்பு அதிகம் உள்ள பொருள் விமான மூலம் வந்திருப்பதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளை போல பேசி சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான வரி செலுத்த வேண்டும் எனக் கூறி மோசடி செய்வதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுபோல் இந்த ஆண்டு மட்டும் 110 புகார்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் மேலும் பல்வேறு லோன் செயலிகள் மூலம் கடன் பெறுபவர்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போது செல்போனில் உள்ள டேட்டாக்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை கொடுக்கின்றனர். அதை பயன்படுத்தியும் மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக லோன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் செல்போனில் வைத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன்களை திருடி வெளிநாட்டிலிருந்து அழைப்பது போல பேசி மோசடி செய்வதும் வாட்ஸாப்பிற்கு லிங்க் அனுப்பி அதன் மூலம் வங்கி விபரங்கள் உள்ளிட்டவற்றை திருடி மோசடி அரங்கேற்றப்படுவதும் தெரியவந்துள்ளது .

கடன் செயலிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் மிரட்டல் கால்கள் தொடர்பாக இந்த ஆண்டு 1600 புகார்கள் வந்து இருப்பதாகவும் சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 பேரின் DNA க்களுடன் பிறந்த குழந்தை..! அது எப்படி…முழு தகவல் இதோ!

மேலும் தெரியாத வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் whatsapp குறுஞ்செய்திகள் ஆகியவற்றில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு கிளிக் செய்யும் போது செல்போனில் உள்ள டேட்டாக்கள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான டேட்டாக்களை திருடி பணத்தை மோசடி செய்யும் கும்பல் வாட்ஸ் அப் கால் மூலமாக அதன் பயனாளர்களை குறிவைத்து மோசடி செய்வதாகவும் சைபர் கிரைம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்