பிரிட்டனில் மூன்று டிஎன்எக்களுடன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது வியப்பாக பார்க்கப்படுகிறது , மேலும் எந்த விஷயத்தில் அறிவியல் எப்படி சாத்தியமானது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் மூன்று விதமான டிஎன்ஏக்களுடன் ஒரு குழந்தை பிறந்திருப்பது வியப்பாக உள்ளது மறுபுறம் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது .இதற்கு எளிதான பதில் அறிவியல் தான் ,அதனை தெரிந்து கொள்வதற்கு முன்பாக இந்த டிஎன்ஏ மாற்றத்திற்கான அவசியம் என்ன என்பதை அறிந்து கொள்வதும் அவசியம் .
இன்றைய உலகில் மைட்டோகாண்ட்ரியா குறைபாடு காரணமாக பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது சோகமான செய்தியாகவே இருக்கிறது. மைட்டோகாண்ட்ரியா என்பது மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் சிறிய பகுதியாகும் இவைதான் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
ஆனால் குறைபாடுகளை கொண்ட மைக்ரோ உடலுக்கு சக்தியை தர தவறுகிறது இதனால் குழந்தைகளுக்கு ஆற்றல் கிடைக்காமல் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இது போன்ற ஒரு சூழலை தீர்க்கவே இந்த மூன்று டிஎன்எ -கள் கலப்பு அல்லது மைட்டோகாண்ட்ரியா சிகிச்சை வந்திருக்கிறது.
பிறக்கவிருக்கும் குழந்தைக்கு மைட்டோகாண்ட்ரியா கடத்தல் கருத்தரித்தலுக்கு முன், பின் என இருவழியில் நடைபெறுகிறது. கருத்தரித்தலுக்கு பின் என்ற முறையில் தந்தையின் விந்தும் தாயின் கருமுட்டையும் இணைந்து உருவாகும் கருவில் குறைபாடுடைய மைட்டோகாண்ட்ரியா நீக்கப்படும், கருவில் பெற்றோரது நியூக்ளியர் பாதுகாக்கப்படும். மறுபுறம் தானமாக பெற்ற கருவில் இருந்து மைட்டோகாண்ட்ரியா சேமிக்கப்பட்டு நியூ கிளியர் நீக்கப்படும்.
அதில் பெற்றோர் தன் நியூக்ளியர் சேர்க்கப்படும் ,இதுவே கருத்தரித்தலுக்கு முன்பு மைட்டோகாண்ட்ரியா கடத்தல் மாறுபட்டது.
முதலில் தாயும் கருமுட்டையில் குறைபாடு நீக்கப்படும் தாயின் கருமுட்டையில் இருக்கும் குறைபாடுடைய மைட்டோகாண்ட்ரியா நீக்கப்படும் நியூக்ளியர் பாதுகாக்கப்படும், தானமாக பெறப்படும் கருவில் இருந்து மைட்டோகாண்ட்ரியா சேமிக்கப்பட்டு நியூக்ளியர் ஆகற்றப்படும் .
தாயின் கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியரும் தானமாக பெறப்பட்ட கருமுட்டையில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவும் சேர்க்கப்படும் , பின்னர் கருத்தரித்தலுக்கு அந்த கருமுட்டை பயன்படுத்தப்படும்.
இப்படி பிறக்கும் குழந்தையின் நினைவில் பெரும் பகுதி பெற்றோருடையதாகவே இருக்கும் எனவும் 0.1 சதவீதம் மட்டும் தானம் வழங்கிய அவரது டிஎன்ஏ இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது . குழந்தைகளின் தோற்ற பண்புகளில் மாற்றம் இருக்காது. மேலும் குழந்தைகள் மைட்டோகாண்ட்ரியா குறைபாடுகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மைட்டோகாண்ட்ரியா மாற்றம் அடுத்தடுத்து பல தலைமுறைகளுக்கும் வழிவழியாக கடத்தப்படும். பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டு மைட்டோகாண்ட்ரியா தானம் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரீஸ் திரைப்படம் இன்று விசாரணை!
இதனை அடுத்து அங்கு முதல் முறையாக 3 DNA க்களுடன் ஒரு குழந்தை பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருத்துவமுறையில் குழந்தை பிறப்பு என்பது இது முதல் முறையல்ல 2016ல் அமெரிக்காவில் ஜோடானிய தம்பதிக்கு இந்த மருத்துவ முறையில் குழந்தை பிறந்துள்ளது.
இது போன்ற ஐந்து குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சிகிச்சை மைக்ரோ கண்ட்ரி ஆக குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.