யாருக்குத் தான் இந்த ஆசை இருக்காது. ஆனா வெளியே சொல்லும்போது எனக்குலாம் இப்படி தலைவனா இருக்கணும்கற ஆசையே இல்லன்னு சும்மா சொல்வாங்க. ஆனா உள்ளுக்குள்ள வர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அவர்களுக்கு அதற்குரிய கெப்பாசிட்டி இருக்காது. தனித்திறமை, ஆளுமை தான். அது இல்லங்கற போது அவர்களால் தலைமை வகிக்க முடியாது. தலைவன்னா சும்மா கெத்தா இருக்கணும். சோப்ளாங்கி மாதிரி இருந்தா எப்படி வர முடியும்? எல்லோரும் தலைவனாக மாறலாம். இத்தகைய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் தெய்வ அனுக்கிரகமும் வேண்டும்.
எல்லோருக்கும் இந்த தலைமைப் பதவி கிடைத்து விடாது. அதற்கென தனி ஆளுமைத்திறன் வேண்டும். அவர்கள் தான் தலைமைப்பதவிக்கு வர முடியும். எல்லோருக்கும் அதற்கான ஆசை இருக்கலாம். ஆனால் அதை அடைவது கொஞ்சம் கடினம்.
விடாமுயற்சியும், கடின உழைப்பும், பலனை எதிர்பாராத கடமை உணர்வும் வேண்டும். அந்த வகையில் தலைமைப்பதவியைக் கிடைக்கச் செய்யும் பாடல் ஒன்று உள்ளது. அபிராமி அந்தாதியில் இந்தப் பாடல் வருகிறது. அது என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
விரவும் புது மலர் இட்டு, நின் பாத
விரைக்கமலம் இரவும் பகலும்
இறைஞ்ச வல்லார், இமையோர்
எவரும் பரவும் பதமும்,
ஐராவதமும், பகீரதியும், உரவும் குலிகமும்,
கற்பகக் காவும் உடையவரே.
இது அபிராமி அந்தாதியின் 83வது பாடல். புத்தம் புது மலர்களைக் கொண்டு இரவும் பகலும் பூஜித்த பலன்களால் தேவாதி தேவர்களுக்கு எல்லாம் தலைவனாக ஐராவதம் என்ற யானையை உடையவனாக தேவேந்திரன் விளங்குகிறார்.
அமராவதிப்பட்டணத்திற்கும் தலைவனாக இருக்கிறார். பகீரதியும், மிக வலிமை உடைய வஜ்ராயுதத்தையும், கற்பக மரத்தையும் உடையவர் தான் இந்தத் தேவேந்திரன். கேட்டால் கொடுப்பது காமதேனு. ஆனால் நினைத்தாலே அதைக் கொடுக்கும். அதுதான் கற்பக மரம்.
இந்தப் பாடலை தினமும் பாராயணம் பண்ணினால் நல்ல வேலை ஆள்கள் அமைவார்கள். நாம் இந்திரனைப் போல சுகமான வாழ்வுடன் இருக்கலாம். இப்ப எல்லாம் வேலை ஆள்கள் கிடைப்பதே ரொம்ப கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் அவர்கள் நல்ல வேலை செய்பவராக இல்லை. அப்படி அமைவது எல்லாம் தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே முடியும்.
அதனால் யாருக்கு எல்லாம் இது மாதிரி தேவேந்திரன் போன்ற வாழ்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்கள் இந்தப் பாடலைப் பாராயணம் செய்து வர வேண்டும்.