இந்தியா, நேபாளம், பூடான் முடிந்தது.. அஜித்தின் அடுத்த சுற்றுப்பயண தேதி அறிவிப்பு..!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்ட நடிகர் அஜித் அடுத்த கட்டமாக பூடான் மற்றும் நேபாளம் நாடுகளையும் முடித்துவிட்டார். ஏற்கனவே அவர் ஐரோப்பாவில் உள்ள ஒரு சில நாடுகளில் சுற்றுப்பயணம்…

ajith bike2

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்ட நடிகர் அஜித் அடுத்த கட்டமாக பூடான் மற்றும் நேபாளம் நாடுகளையும் முடித்துவிட்டார். ஏற்கனவே அவர் ஐரோப்பாவில் உள்ள ஒரு சில நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட பைக் சுற்று பயணத்தை அவர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.

நடிகர் அஜித் கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறார். கடந்த ஆண்டு அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு பைக்கில் சென்றார் என்பதும் தெரிந்ததே.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்ட நடிகர் அஜித் தற்போது பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்டார்.

இதையடுத்து அடுத்த வாரம் முதல் அவர் விடாமுயற்சி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு 40 நாட்கள் அவர்  கால்ஷீட்  கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் வரும் நவம்பர் மாதம் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்குள் அவர்  உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.