எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா சோர்வை விரட்ட சில டிப்ஸ்!!

By Velmurugan

Published:

நம்மில் சிலர் பார்ப்பதற்கு எப்பொழுதும் சோர்வாகவே இருப்பார்கள். காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுவதும் சோர்வாக இருப்பதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. உடல் சோர்வு காரணமாக அவரது செயல்கள் தன்னம்பிக்கை இல்லாதது போல தெரியும்.

பொதுவாக தூக்கமின்மை குறைந்த அளவு உடல் செயல்பாடு அல்லது முறையற்ற உணவு ஆகியவை உங்களை சோர்வடைய தர செய்யும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலின் பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

தோல் ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை பல ஆரோக்கிய நன்மைகளை தண்ணீர் குடிப்பதால் மட்டுமே கிடைக்கிறது. குறைந்த அளவிலான தண்ணீர் எடுத்துக்கொள்ளும் போது நமது உடலுக்கு அது குறைந்த ஆற்றலையே கொடுக்கிறது.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் அதன் சத்துக்களின் விகிதம் உடலின் ஆற்றலை முடிவு செய்கிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உடல் சோர்வடையலாம்.

வைட்டமின் டி வைட்டமின் பி1 இரும்பு மெக்னீசியம் பொட்டாசியம் ஆகியவை குறைந்த அளவில் இருக்கும் பட்சத்தில் உடல் சோர்வடையலாம். அதேபோல போதுமான தூக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம்.

காட்பாடியில் கைவிடப்பட்ட பெண் குழந்தை – தத்தெடுக்க போட்டி போடும் 10 தம்பதிகள்!

நம்மில் பலர் போதுமான அளவு தூங்குவதில்லை இது சோர்வுக்கு வழிவகுக்கும். தூக்கத்தின் போது உடல் முக்கியமான வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுவது மற்றும் செல்களை சரி செய்தல் உட்பட பல முக்கியமான செயல்முறைகளை செய்கிறது. இது அடுத்த நாள் உற்சாகமாக உணர வைக்கிறது.