AI தொழில்நுட்பம் எதிரொலி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலை செய்பவர்களுக்கு வேலையே இருக்காது..

By Bala Siva

Published:

தற்போது உலகம் முழுவதும் AI தொழில்நுட்பம் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI நுழைந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். AI தொழில் நுட்பத்தின் மூலம் மிகவும் எளிதாக சீக்கிரமாக வேலை முடிவடைவதால் அந்த தொழில்நுட்பத்தை பல தொழிலதிபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பத்து நபர்கள் செய்யும் வேலையை இந்த AI தொழில் நுட்பம் ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்து விடுகிறது என்பதும் அதுவும் வேலைகள் மிகவும் துல்லியமாக இருக்கிறது என்பதன் தான் AI தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்த காரணமாக உள்ளது.

AI காரணமாக பலர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஐந்து வருடத்தில் தற்போது செய்து வரும் வேலையே இருக்காது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக வங்கிகள் தற்போது கிட்டத்தட்ட முழு அளவில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய தொடங்கி விட்டதால் வங்கிகளில் பணிபுரியும் பலர் வேலை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது அனைத்து வங்கிகளிலும் நேரடியாக பணத்தை எடுக்க வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இலட்சக்கணக்கில் பணம் எடுக்க வேண்டும் என்றால் மட்டுமே வங்கிக்கு நேரடியாக செல்கின்றனர் என்றும் ஒரு சில ஆயிரங்கள் என்றால் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வங்கியில் உள்ள காசாளர்கள் எழுத்தர்கள் கணக்கர்கள் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. இதையும் தாண்டி வங்கிகளே ஒரு சில ஆண்டுகளில் மூடப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. முக்கிய நகரங்களில் உள்ள பல கிளைகள் மூடப்படும் என்றும் வங்கிகளின் அவசியம் இனி வாடிக்கையாளர்களுக்கு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

wipro jobஅதேபோல் AI தொழில்நுட்பத்தின் மூலம் பலர் தற்போது கதை கட்டுரைகளையும் எழுத ஆரம்பித்து விட்டதால் வருங்காலத்தில் எழுத்தாளர்களுக்கும் வேலை இருக்காது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஹாலிவுட் உள்ள திரைப்பட எழுத்தாளர்கள் இதுகுறித்து போராட்டம் நடத்தினார்கள் என்பதும் திரைப்பட தொழிலில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைகளில் செய்திகள் மற்றும் கட்டுரை எழுதுவது கூட தற்போது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதால் அது சம்பந்தமான பணி செய்பவர்களுக்கும் வேலை காலியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளில் தற்போது வேலை பார்ப்பவர்கள் எதிர்காலத்தில் அந்த வேலையை இருக்காது என்று கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் எலக்ட்ரிக் வாகன நிபுணர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அதேபோல் AI குறித்த படிப்புகளை படித்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வருங்காலத்தில் AI தொழில்நுட்ப வல்லுநர்கள் சுமார் 35 சதவீதம் பேர் அதிகம் தேவைப்படுவார்கள் என்றும் வணிகம் தகவல் பாதுகாப்பு டேட்டா வல்லுநர்கள் மிக அதிகமாக தேவைப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதேபோல் டிரைவர்கள் மெக்கானிக், தச்சர்கள் பெயிண்டர்கள் கொத்தனார் உள்ளிட்டவர்களுக்கு எந்த காலத்தில் AI தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.