ஜேஇஇ முதல்நிலை தேர்வு கட்-ஆப் மதிப்பெண் 90.7%..! 5 ஆண்டுகளில் இல்லாத உயர்வு..!

By Bala Siva

Published:

ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜேஇஇ  கட் ஆப் மதிப்பெண் 90.7 சதவீதம் என அதிகரித்துள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள ஐஐடிகளில் இளநிலை பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்றால் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத வேண்டும் என்பது தெரிந்ததே. இந்த ஜேஇஇ  மெயின் தேர்வு எனப்படும் முதல் நிலை தேர்வில் முதலில் தகுதி பெற வேண்டும். அந்த வகையில் 2023 24 கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வை சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினார் என்பதும் இதில் அட்வான்ஸ் தேர்வை எழுதுவதற்கு 2,51,670 பேர் பகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பொதுப் பிரிவு கட் ஆப் மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொது பிரிவிற்கான கட் ஆப் மதிப்பெண் 90.7 சதவீதம் என உயர்ந்துள்ளது அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 88.4 சதவீதம், 2021 ஆம் ஆண்டு 88.8%, 2020 ஆம் ஆண்டு 90.3% என்று இருந்த நிலையில் இந்த ஆண்டு 90.7% என அதிகரித்துள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பொது பிரிவை பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கட் ஆப் மதிப்பெண் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிசி பிரிவினருக்கான கட்-ஆப் இந்த ஆண்டு 73.6% என அதிகரித்துள்ளது. இது கடந்த கல்வியாண்டில்  67 சதவீதமாகவும், 2021-ல் 68 சதவீதமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு எஸ்.சி. பிரிவினருக்கான கட்-ஆப் 43% என இருந்த நிலையில் இந்த ஆண்டு 51.9 ஆக அதிகரித்துள்ளது. எஸ்.டி.பிரிவினருக்கான கட்-ஆப் 26.7-லிருந்து 37.2 ஆக அதிகரித்துள்ளது.