வாய் துர்நாற்றத்தை ஒழிக்கும் 10 எளிய வீட்டு பொருட்கள் இதோ!

By Velmurugan

Published:

பொதுவாக அனைவரும் வாய் துர்நாற்றம் உள்ள ஒரு நபரிடம் அருகில் அமர்ந்து பேச தயங்குவார்கள். சுத்தமாக பல் துலக்கிய பிறகும் வாய்ப்பு துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? வாய் அடிக்கடி வரண்டு போவதற்கு பீரோசாமியா என்று அழைக்கப்படுகிறது. இது வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும்.

இரண்டு செல்களின் தோல் தானாகவே வெளியேற்றுவது போல் பற்கள் அழுக்கை தானாக வெளியேற்ற இயலாது. பற்களை தினமும் சுத்தம் செய்தால் தான் பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். மேலும் இல்லையென்றால் இதுவும் துர்நாற்றத்திற்கு காரணமாக அமையும்.

மேலும் அல்சர் குடல் புண் ஈறுகளில் வீக்கம் பல் சொத்தை ரத்தக்கசிவு நீரிழிவு நோய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே பிரச்சனையை சரிப்படுத்த முதலில் சுத்தமாக இருக்க வேண்டும்.

காலை மற்றும் இரவு என இரு வேலைகளும் பல் துலக்க வேண்டும். நாக்கையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். எந்த ஒரு உணவு மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்ட பின் நன்கு வாய் கொப்பளிக்கவும். வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் கொண்ட ஆயில் புல்லிங் செய்யலாம்.

வாய் துர்நாற்றத்தை போக்க உணவு உண்ட பின் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வருவது வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட வழி வகுக்கும்.

தினமும் சாப்பிடுற இட்லிக்கு இப்படி ஒரு வரலாறா….. இட்லியில் இவ்வளவு நன்மை இருக்கா இது தெரியாம போச்சே…

ஒன்று இரண்டு மிளகாய் வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் உமிழ்நீரை சிறிது சிறிதாக விளங்கி வர வாய் துர்நாற்றம் கட்டுப்படுத்தலாம்.

ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம் இதுவும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.

ஒரு ஸ்பூன் சோம்பையும் வாயிலிட்ட சுவைக்கலாம் இதுவும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.

அதிக அளவு வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை கலந்து வாய் கொப்பளித்து வந்தால் விரைவில் இந்த பிரச்சனை தீரும்.

மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்க்க வந்தால் குடல் புண்களை சரி ஆகி வாய் துர்நாற்றம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்