தினமும் சாப்பிடுற இட்லிக்கு இப்படி ஒரு வரலாறா….. இட்லியில் இவ்வளவு நன்மை இருக்கா இது தெரியாம போச்சே…

By Velmurugan

Published:

தமிழ் மக்களுக்கு 17-ஆம் நூற்றாண்டிலிருந்து இட்லி என்று பெயர் பரிச்சயம் ஆகிவிட்டது. மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

இந்தோனேசியாவை பிறப்பிடமாகக் கொண்டதாக கருதப்படும் இட்லி தென்னிந்தியாவின் ஆஸ்தான டிபன் ஐட்டமாக மாறிப்போனது ஒரு ஆச்சரியம் தான். இடியாப்பம், புட்டு போல ஆவியில் வேகவைத்து செய்யப்படும் உணவு வகைகளில் தமிழகத்தில் இட்லிக்கு தான் முதலிடம்.

சாம்பார், சட்னி, கறி குழம்பு, மீன் குழம்பு என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் அதற்கே உரிய சுவையோடு பொருந்தி அசத்தும் இட்லி. ஆரோக்கிய நன்மைகளும் அதிகம் கலோரிகள் குறைவாக இருக்கும் இட்லி சாப்பிடும் போது திருப்தியான உணர்வை தரும்.

இதனால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதை தவிர்க்கலாம். இட்லியில் நார்ச்சத்து இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும் இதனாலையே காய்ச்சல் போன்ற உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கும் சமயங்களில் இட்லி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

இட்லி சாம்பார் மற்றும் வடையை சேர்த்து சாப்பிடும்போது கிடைக்கும் அமில சேர்க்கையால் புரதச்சத்து உருவாவதாக கூறப்படுகிறது. உடலுக்கு தேவையான சத்துக்கள் பலவற்றையும் அளிக்கும் .

இந்த பிரச்சனை இருந்தா? மறந்து கூட கத்திரிக்காய் சாப்பிடக் கூடாது!

இட்லியில் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் சத்துக்களும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது , உணவு நிபுணர்கள் ஆரோக்கியமான சரிவிகித உணவில் இட்லியை பயன்படுத்தி கொள்ளலாம் என கருத்து தெரிவிக்கின்றன.