கும்பம் மே மாத ராசி பலன் 2023!

கும்ப ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 3ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 1ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிரன் 5ஆம் இடத்திலும், செவ்வாய் பகவான் 6ஆம் இடத்தில்…

kumbam

கும்ப ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 3ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 1ஆம் இடத்தில் உள்ளார். சுக்கிரன் 5ஆம் இடத்திலும், செவ்வாய் பகவான் 6ஆம் இடத்தில் நீச்சம் பெற்றும் இட அமர்வு செய்துள்ளனர்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்படும். வேலைப்பளு மிகுதியாக இருக்கும். மேல் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், தொழில்ரீதியாக உங்களுக்கு இருந்த ஆதரவு குறையும்.

தொழில்சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முடிவுகளில் மிகக் கவனம் தேவை. தைரியமாக முன்னேடுத்துச் செல்வதைக் காட்டிலும் அமைதியாகக் காத்திருத்தல் நல்லது.

பொருளாதாரரீதியாக வரவினைக் காட்டிலும் செலவுகள் பெரிய அளவில் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகவே இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன்கள் அமையாது. காத்திருந்து வரன் பார்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே கடும் பிரச்சினைகள் ஏற்படும். கணவன்- மனைவி இருவர் மத்தியில் மன வெறுமை, வெறுப்பு போன்றவை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்களைப் பொறுத்தவரை கடுமையான போராட்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை பொறுப்புகள் அதிகரிக்கும், உங்கள் மீதான சுமை நெருக்குவதாக இருக்கும்.