சென்னையின் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருவதை அடுத்து கோடை வெயிலால் தத்தளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் தமிழக முழுவதும் கொளுத்தி வருகிறது என்பதும் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்தாலும் தமிழக முழுவதும் பொதுவாக வறண்ட வானிலையை காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 முதல் 15 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான விற்கும் பதிவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள பல இடங்களில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் காரணமாக மிகவும் உருக்கமான வெப்பநிலையை அனுபவித்து வந்த பொதுமக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அண்ணா நகர், கோயம்பேடு, எழும்பூர், திருவல்லிக்கேணி, ஆகிய பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சாலிகிராமம் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்பதும் இந்த கோடை மழையால் வெப்பம் சற்று அணிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் வீடியோ உடன் கூடிய சமூக வலைதள பதிவுகள் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.