தோனி நீக்கப்படும் அபாயம் உள்ளது: சிஎஸ்கே வீரர்களுக்கு சேவாக் எச்சரிக்கை..!

By Bala Siva

Published:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே தோனி என்ற நிலையில் தோனி நீக்கப்படும் அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு பந்து வீச்சாளர்கள் செயல்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும் இந்த வெற்றியால் தோனியை திருப்தி அடைய செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசமாக பந்து வீசியதாகவும் குறிப்பாக வைடு பால்கள் அதிகம் வீசியதாகவும், அவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஒயிட் பால்கள் மற்றும் நோபால்கள் அதிகம் வீசினால் சிஎஸ்கே அணி வேறொரு கேப்டன் தலைமையில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும் என ஏற்கனவே தோனி எச்சரிக்கை செய்துள்ள நிலையில் நேற்றைய போட்டியில் நோபால் வீசவில்லை என்றாலும் ஆறு வைடுபால்கள் வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

shewag - 3

இந்த நிலையில் இது குறித்து சேவாக் கூறுகையில் ’அதிகமாக உதிரி ரன்கள் வழங்குவதால் அணியின் வெற்றி பாதிக்கப்படுவது மட்டுமின்றி தோனி போட்டியிலிருந்து நீக்கப்படும் அபாயமும் இருக்கிறது என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிக உதிரி ரன்கள் வழங்குவதை குறைக்கவில்லை என்றால் ஒருநாள் தோனி இல்லாமல் களமிறங்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் அது மட்டும் இன்றி மிகவும் தாமதமாக ஓவர்கள் வீசுவதால் தோனிக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை அணி வீரர்கள் தோனியின் அறிவுரையை ஏற்று நோபால் மற்றும் வைடு இல்லாமல் பந்து வீச கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அது மட்டும் இன்றி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் அணி பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இருக்கும் என்றும் அப்படி ஒரு காலத்தில் தோனி இல்லாமல் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டால் நிச்சயம் அணியின் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேநேற்றைய போட்டியில் பெங்களூரு அணி அதிகமாக உதிரி இடங்களை கொடுத்தது என்பதும் அதைவிட சென்னை அணி குறைவாக உதிரிகளை கொடுத்தாலும் தோனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் அறிவுரையை ஏற்றி வரும் போட்டிகளில் ஆவது பந்துவீச்சாளர்கள் உதிரி ரன்களை குறைவாக கொடுக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமானது.