வாழ்க்கையில் வெற்றி பெற கடுமையாக இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும் 4 ஆம் தேதியில் பிறந்தவர்களே! 4 ஆம் தேதியில் ஏன்தான் பிறந்தோமோ? என்று பல நாட்கள் நீங்கள் வருந்தியதுண்டு, ஏனென்றால் அவ்வளவு உழைக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு.
இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கண்டிப்புடன் வாழும் குணம் கொண்டவர்கள்; ஆனால் அந்தக் கண்டிப்பு பல நேரங்களில் சிக்கல்களில் முடிவதால் சில நேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அனுசரித்துச் செல்லும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
4 ஆம் தேதியில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்; உங்களின் கடுமையான உழைப்பு என்றும் வீண் போகாது; உங்களைத் தேடி சிம்மாசனம் கிடைக்கும் நாளும் வரும்.
கவலைகள் விலக நீங்கள் கலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்; உங்களுக்கு நரம்பு சார்ந்த பிரச்சினைகள் வரக் கூடும்; முடிந்தளவு பிரச்சினைகளை மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
எந்தவொரு விஷயத்திலும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் பாருங்கள்; வெற்றி பொறுமையாகக் கிடைத்தாலும் நிச்சயம் கிடைக்கும். வயது ஏற ஏற உங்களைத் தேடி வெற்றி வரும்; 30 வயதுக்கு மேல்தான் உங்களின் வாழ்க்கை புதிதாதத் துவங்குவது போல் இருக்கும்.
கல்வி உங்கள் வாழ்க்கையினை நீங்கள் நினைத்திராத இடத்திற்கு அழைத்துச் செல்லும். வாழ்க்கையில் பல திருப்பங்களைப் பார்ப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. மற்றவர்கள் உங்கள் மீது அன்பு, அக்கறை, மரியாதை செலுத்தவில்லை என்று தெரிந்தால் அதுகுறித்து மனம் வருந்தி புலம்புவீர்கள்.
அடிக்கடி கடவுளின் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டாலும் கலங்காமல் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்
4 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1, 5, 10,19
நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 7, 8, 17, 22, 28
உங்களுக்கான நிறங்கள்: வெளிர் நீலம் நிறம், ஆகாய நீல நிறம்.
தவிர்க்க வேண்டிய நிறம்: கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.
உங்களுக்கான நவரத்தினக் கல்- கோமேதம் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கம் அல்லது வெள்ளியுடன் போடவும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
தொழில் துறை – உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்கள், அச்சுத் தொழில், இயந்திரத் தொழில் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.
சனிக் கிழமை உங்களுக்கு உகந்த நாளாகும். அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமை என்ற அளவில் சென்று அம்பாளை மனமுருகி வழிபட்டு வரவும்.