ஆரோக்கியத்தின் அஸ்திவாரம்: அதிகாலையில் எழ ரொம்ப ரொம்ப ஈசியான வழி இதுதாங்க…!

By Sankar Velu

Published:

அதிகாலையில் துயில் கொள்பவன் வாழ்வில் கவலையே இல்லை என்று சொல்வார்கள். இந்த ஒற்றைப் பழமொழியைக் கடைபிடித்து வந்தாலே போதும். நாம் வாழ்வில் முன்னேறி விடலாம். சொல்றது ரொம்ப ஈசி. அதைச் செய்றது தானே கஷ்டம்.

அப்படின்னு சொல்லக்கூடாது. கஷ்டத்தையும் இஷ்டப்பட்டு செய்தோமானால் நாம் செய்யும் காரியங்கள் எளிதில் கைகூடி விடும். அதிகாலையில் எழுவதற்கு ரொம்ப ரொம்ப ஈசியான வழி என்னன்னு பார்க்கலாம்.

இரவில் சாப்பிடும் ஜீவராசிகள் பகலில் சாப்பிடாது. பகலில் சாப்பிடும் ஜீவராசிகள் இரவில் சாப்பிடாது. மனிதன் மட்டுமே 3 வேளை உண்கிறான். ஒருவேளை உண்பவன் யோகி. 2 வேளை உண்பவன் போகி. 3 வேளை உண்பவர்கள் துரோகி. இந்த உடம்புக்கு அவர்கள் துரோகி.

3 வேளை சாப்பிட்டாலே உடம்புல நோய் தான். நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆக 4 மணி நேரம் ஆகும். அது குடலைப் போய் அடைய 2 மணி நேரம் ஆகும். மொத்தம் 6 மணி நேரம்.

காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை. இதுதான் நாம் சாப்பிடும் நேரம். இதுக்கு அப்புறம் நாம் சாப்பிடக்கூடாது. அந்தக் காலத்தில் எல்லாம் இரவில் யாருமே சாப்பிட மாட்டாங்க.

காலையில் பெரும்பாலும் சாப்பிட மாட்டாங்க. 10… 11 மணிக்கு சாப்பிடுவாங்க. சாயந்திரம் வேலை முடிந்து வந்த உடனே சாப்பிடுவாங்க. அதனால தான் அந்தக் காலத்துல இவ்வளவு வியாதிகள் கிடையாது. அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கமும் இருந்தது.

Night food
Night food

நாம் இரவில் 10 மணிக்கு சாப்பிடுகிறோம். இந்த உணவானது செரிமானம் அடைய வேண்டும் அல்லவா? நாம் சாப்பிட்டு விட்டு படுத்து விடுகிறோம். இரவு ஓய்வு எடுப்பதாகக் கருதி தூங்கி விடுகிறோம். இந்த ஓய்வு உடலுக்குத் தானே. ஆனால் இந்த நேரத்தில் அது ஓய்வு எடுத்தால் நாம் சாப்பிட்ட சாப்பாட்டை அது எப்படி செரிமானமாக்கும்?

இந்த உடம்பு ஓய்வு எடுக்கணும்னா உள்ளுறுப்புகள் வேலை செய்யக்கூடாது. நாம் இரவு 10 மணிக்கு சாப்பிடும் சாப்பாடு ஜீரணமாக 4 மணி நேரம் ஆகும். அது குடலுக்குப் போக 2 மணி நேரம் ஆகும் அல்லவா.. அதனால் நாம் தூங்கினாலும் கண்கள் தான் தூங்குகிறதே தவிர உடல் உள்ளுறுப்புகள் வேலை செய்து கொண்டிருக்கிறது.

Sleeping
Sleeping

ஆண்களுக்கு 5 மணி நேரம், பெண்களுக்கு 6 மணி நேரம் போதுமான உறக்கம். கூட 1 மணி நேரம் உறங்கலாம். நைட் சாப்பிட்டு விட்டு படுப்பதால் தான் அது உடலுக்குள் ஜீரணமாவதால் நம்மால் அதிகாலையில் எழ முடியவில்லை. அதனால் இரவு உணவைக் கட்டாயமாகத் தவிர்ப்பது நல்லது.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இதை மறக்காமல் செய்யுங்க. நாம் 3 வேளை சாப்பிடுகிறோம். ஆனால் குழந்தைகள் எல்லாம் 2 வேளை தான் சாப்பிடுகிறது.

நாம் தான் நம்மைப் போலவே மாற்ற வேண்டும் என்று அதற்கும் 3 வேளை உணவு கொடுத்து பழக்குகிறோம். பகலில் நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்துகளானது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அது ரத்தநாளங்களில் சேர்வதில்லை. இரவில் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பானது உடலில் அப்படியே தங்கி விடுகிறது. இது ரத்தநாளங்களில் சேர்ந்து நமக்கு மாரடைப்பை உண்டாக்குகிறது.

Health girl
Health girl

ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுபவர்கள் சில தியாகங்களைச் செய்து தான் ஆக வேண்டும். என்னால் 3 வேளை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்பவர்கள் இரவு 7 மணிக்கே அதுவும் அரைவயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு விட்டுப் படுக்கலாம். இரவில் எளிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். அப்போது தான் எளிதில் ஜீரணமாகும். உடலும் தன் வேலையை முடித்து ரெஸ்ட் எடுக்க ஆரம்பிக்கும்.