காபி குடிச்சா கொழுப்பை குறைக்க முடியுமா? முழு தகவல் இதோ!

பொதுவாக காபியை உடல் எடையைக் கவனிப்பவர்கள் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது உங்கள் கலோரி அளவை அதிகரிக்கும். எனவே, வீட்டிலேயே பலவிதமான காபிகளை, எடை இழப்புக்கு ஏற்றதாக மாற்றுவததே இந்த புது முயற்சி.

இலவங்கப்பட்டை காபி:

உங்கள் ஒரு கப் கருப்பு காபி அல்லது வழக்கமான காப்பி, அதில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து கொழுப்பை எரிக்கும் மருந்தாக மாறலாம். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், இலவங்கப்பட்டையில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் கலவையானது எடை குறைப்பு செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.

அடிக்கும் வெயிலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 8 உணவு முறைகள் இதோ!

எலுமிச்சை காபி

1 கப் புதிதாக காய்ச்சப்பட்ட காபியில் 12 துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துளி இலவங்கப்பட்டை சேர்த்து இந்த பானத்தை பெறலாம், இது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்த உதவும். இந்த பானம் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews