சிலர் கோவிலுக்குப் போய்ட்டு வந்தால் தவறாமல் கயிறு வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு. வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தார், உறவினர்கள் வீடுகளுக்கும் இந்தக் கயிறைக் கொடுப்பதுண்டு. மெல்லிய கருப்புக் கயிறை காசிக்கயிறு என்று சொல்வார்கள்.
திருப்பதிக்குப் போய்ட்டு வருபவர்கள் கொண்டு வரும் கயிற்றில் டாலருடன் முடிச்சுகளும் போடப்பட்டு இருக்கும். சில கயிறுகள் சிவப்பு, மஞ்சள், பச்சை என கலர் கலராகவும் இருக்கும். ஆனால் இதை எதற்காகக் கட்டுகிறோம் என்பதை நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்வதில்லை.
தந்தாங்க. கட்டியாச்சு என கட்டிக் கொள்வோம். கட்டாவிட்டால் சாமி குத்தம்னு பயந்து கட்டுபவர்களும் உண்டு. என்ன இருந்தாலும் அப்படி இந்தக் கயிறுகளில் என்ன தான் விசேஷம் என்று நாமும் பார்த்து விடுவோமே…
கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம்.
இன்னும் ஒரு சிலர் தன்னுடைய விருப்பங்களை வேண்டிக் கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக் கொள்கின்றனர். இன்னும் ஒருசிலர் தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக் கொள்ளவும் பயன்படுத்து கின்றனர்.
சிலர் அந்தக் கயிறு நிறம் வெளுத்து அந்து விழும் வரை கைகளிலேயே விட்டு விடுகிறார்கள். ஆனால் அது தவறு. அந்த கயிற்றை எத்தனை நாள் கையில் கட்டியிருக்கலாம்? எப்படி கட்ட வேண்டும் என பார்ப்போம்.
காசி, திருப்பதி போன்ற இடங்களிலும் மற்றும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர்; கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறும் தரப்படுகிறது. அதுவும் கையில் கட்டப்படுகிறது.
ஆண்கள் என்றால் வலது கை. பெண்கள் என்றால் இடது கை. இப்படித் தான் கயிறு கட்ட வேண்டும் என்றும் ஒரு சில நியதிகள் உண்டு. எத்தனை முடிச்சு போடவேண்டும்? கையில் ஐந்து முடிச்சுக்கள் போட வேண்டும். ஆணவம், பொறமை, ஆசை, உடல் நிலையானது ஆகியவற்றைக் குறிக்கின்றன.
கர்ம வினைகளை அழிக்கும்
பயத்தை போக்கும். தைரியத்தை தரும். கர்ம வினைகளை அழிக்கும். விபத்துகளிலிருந்து காக்கும். ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போக்கும். நோய்களையும், தோஷங்களையும் விலக்கும். அதே போல ஒரு சிலருக்கு நைட் படுத்தவுடன் கெட்ட கெட்ட கனவுகளும், பயங்கரமான கனவுகளும் வந்து அவர்களுக்கு உயிர் பயத்தைத் தரும்.
அப்படிப்பட்ட தீய கனவுகளை தோன்றாமல் செய்யும். கடன்கள் தீரும். பைரவர் அருளை பெருக்கும். அதை எந்த கையில் கட்டவேண்டும்? ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.
வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். எத்தனை நாள் கட்டவேண்டும்? இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது.
இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார் காலிலும் படும்படி போடக்கூடாது. இது உங்கள் உடல் நலத்திற்கும்,வாழ்க்கை வளத்திற்கும் அரணாக அமையும்!
அறிவியல் ரீதியாக பார்த்தால் மணிக்கட்டு அருகில் நாம் கயிற்றைக் கட்டுவதால் நாடிகளின் இயக்கம் சீராகச் செயல்படுகிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.