தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்துவரும் தளபதி 67 படத்தின் டைட்டில் நேற்று வெளியானது என்பதும் லியோ என்ற டைட்டில் நேற்று இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.
அதுமட்டுமின்றி இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக வெளிவந்த லியோ படத்தின் வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் லியோ டைட்டிலுக்கு ஒரு சிறப்பு இருப்பதாக சில விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்
இதுவரை விஜய் நடித்த 66 படங்களில் ஒரு படத்தில் கூட ஆங்கிலத்தில் மூன்றெழுத்து டைட்டில் இல்லை என்பதும் இந்த படத்தின் டைட்டில் மட்டுமே முதல்முறையாக 3 எழுத்து டைட்டிலாக வெளி வந்திருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
அதேபோல் விஜய்யின் அடுத்த தேவா, குஷி, யூத். ஆதி. சுறா. புலி. தெறி ஆகிய படங்களை அடுத்து தமிழில் இரண்டெடுத்து டைட்டில் இதுதான் என்றும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்சன் மற்றும் லோகேஷ் கனகராஜின் யூனிவர்சிஸ் சினிமா ஆகியவை இணைந்து கலக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.